சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 5 அகதிகள் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் படகு ஒன்று நங்கூரமிடப்பட்டிருந்ததாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே கடற்படையினர் குறித்த ஐந்து பேரையும் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு நெடுந்தீவை வந்தடைந்த இலங்கை அகதிகளில் நான்கு பேர் தலைமன்னாரில் ஒரு வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு , யாழப்பாணத்தில் தலைமறைவாகி இருந்து நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர்கள் இங்கிரிய மற்றும் தலைமன்னார் ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment