முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த  சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.

 

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்.

நேற்று முந்தினம் கொக்குத்தொடுவாய் மத்தி நாயடிச்ச முறிப்பு வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியான 42 வயதுடைய கனகையா உதயகுமார் வயல் காவலலுக்காக சென்றுள்ளர்.

இந்நிலையில் நேற்று  இரவு வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடியுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடும் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் பிரதேச மக்கள், இளைஞர்கள் இணைந்து தேடியும் அவரை காணாத நிலையில் படையினரின் உதவியுடன் பிரதேச இளைஞர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது மினாசார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்ற வாசிகளான பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த வயல் காணிப்பகுதியில் சட்டவிரோத கம்பியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார்கள் இதில் சிக்குண்டே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் சடலத்தை மீட்பதற்காக சட்டத்தரணியுடன் கொக்கிளாய் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது