ilakkiyainfo

சந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

சந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)
March 10
20:17 2019

நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களின் ஊடாக மனித உரிமை மீறல்­க­ளுக்கும், இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்­கையை இலங்கை அரசு முற்­றாக நிரா­க­ரிக்கும் போக்கில் செல்­லத் ­த­லைப்­பட்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.

ஆட்சி மாற்­றத்தின் போது பத­விக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்கி அதனை ஏற்­றுக்­கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்­மா­னத்தை நீர்த்துப் போகச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளி­லேயே ஈடு­பட்டு வந்­துள்­ளது. அர­சாங்­கத்தின் இந்த முயற்­சி­யி­லேயே கடந்த நான்கு வரு­டங்­களும் கழிந்து போயி­ருக்­கின்­றன.

ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­கின்ற பற்­று­றுதி அர­சாங்­கத்­திடம் இருந்­தி­ருக்­கு­மே­யானால், பொறுப்பு கூறு­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரிய முறையில் அமைத்து அவற்றின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அந்த முயற்­சிகள் இத­ய­சுத்­தி­யுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

மாறாக காலம் தாழ்த்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­திலும், அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக எழுந்த சிறு சிறு சல­ச­லப்­புக்­க­ளை­யும்­கூட எதிர்ப்­பு­க­ளாகத் திரித்­துக்­காட்டி, நிலை­மாறு கால நீதிக்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் தாம­தப்­ப­டுத்­து­வ­திலும், ஒப்­புக்­காக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தி­லுமே குறி­யாக இருந்து செயற்­பட்டு வந்­துள்­ளது.

பொறுப்பு கூறும் விட­யத்தில் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், இழப்­பீடு வழங்­குதல், மீண்டும் நிக­ழா­மையை உறுதி செய்தல் ஆகிய நான்கு நட­வ­டிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்கு அரசு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

முதல் நட­வ­டிக்­கை­யாக உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கான ஒரு முக்­கிய பொறி­மு­றை­யா­கவே காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை உரு­வாக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்த அலு­வ­ல­கத்தை உரு­வாக்­கு­வதில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். அவர்­க­ளு­டைய கருத்­துக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்டும் என்­பது நிலைப்­பாடு.

ஆனால் அந்த பொறி­முறை உரு­வாக்­கத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கிய தங்­க­ளு­டைய கருத்­துக்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. தங்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை என்று காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையைக் கண்­ட­றிந்து வெளிப்­ப­டுத்தி, இணக்­கப்­பாட்­டையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக நடத்­தப்­ப­டு­கின்ற விசா­ர­ணை­களின் விப­ரங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட மாட்­டாது என்ற நிலைப்­பாட்­டையே காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகப் பொறி­மு­றையில் அரசு கொண்­டி­ருக்­கின்­றது.

unஅந்த அலுவலகத்துக்கு விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கான அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டா­லும்­கூட, அந்த விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்யும் அதி­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை.

வலிந்து ஆட்­களைக் காணாமல் ஆக்­கு­வ­தென்­பது, சாதா­ரண சட்­டங்­களின் கீழ் பார­தூ­ர­மான தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். யுத்த மோதல்­க­ளின்­போதும், யுத்தச் சூழ­லிலும், அடா­வ­டி­யாக ஆட்கள் கைது செய்­யப்­பட்­டதும், மக்கள் மத்­தியில் அச்ச உணர்வை ஏற்­ப­டுத்­தவும், அவர்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்கும், விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் இணைந்­தி­ருந்தால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பான விளை­வு­களை உணர்த்தும் வகை­யி­லு­மா­கவே ஆட்கள் கடத்­தப்­பட்­டார்கள். காணாமல் ஆக்கச் செய்­யப்­பட்­டார்கள்.

யுத்த மோதல்கள் தீவி­ர­ம­டை­வ­தற்கு முன்னர், இலக்கத் தக­டில்­லாத வெள்ளை நிற வேன்கள் ஆட்­க­டத்­தல்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­போது, வெள்ளை வேன் என்­பது பயங்­க­ரத்தின் அடை­யா­ள­மாகத் திகழ்ந்­ததை மறக்க முடி­யாது. அவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் வீடு­க­ளுக்குத் திரும்­ப­வில்லை. அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதும் தெரி­ய­வில்லை. அச்­சு­றுத்­த­லா­கவும், அச்­சு­றுத்தி அடக்கி ஒடுக்­கு­வ­தற்­கா­கவும் வெள்ளை வேன் கடத்தல் நட­வ­டிக்­கையை படை­யினர் ஓர் உத்­தி­யாகப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

வெள்ளைவேன் கடத்தல் படிப்­ப­டி­யாக முன்­னேற்­ற­ம­டைந்து கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளையும், இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்­க­ளையும், விசா­ர­ணைக்­கென்று அழைத்துச் செல்­லப்­பட்­ட­வர்­க­ளையும் காணாமல் ஆக்கச் செய்யும் கைங்­க­ரி­ய­மாக மாறி­யது. அந்த உச்ச கட்ட நிலையில் காணாமல் போன­வர்­க­ளுக்­காகக் குரல் எழுப்பி, ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்­டங்­களே வளர்ச்­சி­ய­டைந்து இன்று வடக்­கிலும் கிழக்­கிலும் கடை­ய­டைப்­புடன் கூடிய எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யாக உச்சம் பெற்­றி­ருக்­கின்­றன.

இறுதி சந்­தர்ப்­பமா …?

யுத்த நெறி­முறை பிறழ்­வுக்கும், மனித உரிமை மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஐ.நா. வலி­யு­றுத்தி, நிறை­வேற்­றிய பிரே­ர­ணை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த அழுத்தம் கடந்த பத்து வரு­டங்­க­ளாகத் தொடர்­கின்­றது. முதலில் ஒன்­றரை வரு­டமும், அத­னை­ய­டுத்து இரண்டு வரு­டங்­களும் அர­சாங்­கத்­திற்குக் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இரண்டாம் முறை­யாக வழங்­கப்­பட்ட இரண்டு வருட கால அவ­காசம் முற்றுப் பெற்­று­விட்­டது. ஆனால் பொறுப்பு கூறு­வதில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றத்தைக் காண முடி­ய­வில்லை. இதனால், இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நியாயம் வழங்­கப்­படும், நீதி வழங்­கப்­படும் என்ற நம்­பிக்கை பாதிக்­கப்­பட்ட மக்கள் மனங்­களில் இருந்து படிப்­ப­டி­யாக மறைந்து வரு­கின்­றது.

இந்த நிலையில் மீண்டும் கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான புதிய பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அமர்வில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த முயற்­சியைத் தனக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டை நீர்த்துப் போகச்­செய்­வ­தற்­கான முயற்­சி­களில் அர­சாங்கம் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றது.

யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் பொறுப்பு கூறும் விட­யத்தில் போதிய முன்­னேற்­றத்தைக் காட்டத் தவ­றி­யுள்ள அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையோ, ஐ.நா.வோ அல்­லது சர்­வ­தே­சமோ எந்­த­வி­த­மான எதிர் நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை. இது அர­சாங்­கத்­திற்கு சாத­க­மான ஒரு போக்கில் ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் சென்­று­கொண்­டி­ருக்­கின்­றதோ என்ற சந்­தே­கத்­தையே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய மனங்­களில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பொறுப்பு கூறும் விட­யத்தில் சர்­வ­தேச விசா­ர­ணை­யையும், பின்னர் கலப்பு விசா­ரணை முறை­யையும் மறு­த­லித்து, உள்ளூர் மட்­டத்­தி­லான விசா­ர­ணை­களே போது­மா­னவை என்ற நிலைப்­பாட்டை எடுத்­துள்­ளது, பொறுப்பு கூறு­வ­தாகப் போக்­குக்­காட்டி கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ள அதே­வேளை, போர்க்­குற்­றங்­க­ளிலும், மனித உரிமை மீறல்­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்த­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்ற பொறுப்­பான பத­வி­களை வகித்த முக்­கி­யஸ்­தர்­க­ளுக்குப் பதவி உயர்வு வழங்­கு­வ­தையும், புதிய புதிய பொறுப்­புள்ள பத­வி­களில் அவர்­களை நிய­மிப்­ப­திலும் அரசு கவனம் செலுத்திச் செயற்­பட்டு வரு­கின்­றது.

இரா­ணு­வத்­தி­னரை எந்தக் கார­ணத்தைக் கொண்டும் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­த­மாட்டோம் என்று சூளு­ரைத்­துள்ள அர­சாங்கம் மனித உரிமை மீறல்­க­ளிலும் போர்க்­குற்றச் செயல்­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் அல்­லது அத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்­தார்கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளையே மனித உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை என்று எடுத்­து­ரைப்­ப­தற்­காக ஜெனி­வா­வுக்கு தனது பிர­தி­நி­தி­க­ளாக அர­சாங்கம் துணி­வோடு அனுப்பிவைக்கவுள்ளது.

முன்னர் ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களை மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஐ.நா.வில் பதி­ல­ளிப்­ப­தற்­காக அனுப்பி வைத்­தி­ருந்த அர­சாங்கம் இம்­முறை மனித உரிமை மீறல்­களே இடம்­பெ­ற­வில்லை என்று முழுப் பூச­ணியை சோற்றில் மறைத்­தி­ருந்த அமைச்சர் ஒரு­வரை இம்­முறை ஜெனி­வா­வுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டை நிறை­வேற்ற வல்ல பொறுப்­பு­வாய்ந்த அதி­கா­ரி­க­ளையும் முக்­கி­யஸ்­தர்­க­ளையும் அனுப்­பு­வ­தற்குப் பதி­லாக மனித உரிமை மீறல்­களே இடம்­பெ­ற­வில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் முகம் சுளிக்­கத்­தக்க வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஒரு­வரை இம்­முறை அரசு ஜெனி­வா­வுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

கப­டத்­தனம்

இந்த நட­வ­டிக்கை பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டில் அர­சாங்­கம் கொண்­டுள்ள கப­டத்­தன்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. மனித உரி­மைகள் பேரவை கூடி இலங்கை விவ­காரம் குறித்து ஆய்வு செய்­கின்ற சந்­தர்ப்­பத்தில், கடந்த காலத்தைத் தோண்டி எடுத்து, பழைய காயங்­களை மீண்டும் கிளற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செய்­தி­யா­ளர்­களைத் தமது இருப்­பி­டத்தில் சந்­தித்­த­போது தெரி­வித்துள்­ளமை இதனை உறுதி செய்­வ­தாக அமைந்­துள்­ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90பொறுப்பு கூறும் விட­யத்தில் நம்­ப­க­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என்று இரண்டு தட­வைகள் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, 2015 ஆம் ஆண்டு பொறுப்பு கூறு­வ­தற்­காக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை மீளாய்வு செய்ய வேண்டும் என ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் கோர­வுள்­ள­தாக இந்த செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்ளார். இந்தக் கோரிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யிடம் முறைப்­படி முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. நாட்டில் அமைதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில், கடந்த காலத்தைத் தோண்­டி­யெ­டுத்து, பழைய காயங்­களைக் கிளற வேண்டாம் என கோர­வுள்­ள­தாக அவர் கூறி­யுள்ளார்.

கடந்த காலத்தை மறந்து சமா­தா­னத்தில் வாழ்­வதை நாம் உறு­திப்­ப­டுத்திக் கொள்வோம் என ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யிடம் தான் கூற­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இந்தக் கூற்று மனித உரிமை அமைப்­புக்­க­ளையும், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும், மனித உரிமை மீறல்­க­ளுக்கு அரசு பொறுப்பு கூறும் என்று நம்­பி­யி­ருந்­த­வர்­க­ளையும் ஏமாற்­றத்­திற்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.

சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்பேன், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று தேர்தல் காலத்தில் வாக்­கு­று­தி­ய­ளித்து, அந்த மக்­களின் ஆத­ர­வுடன் ஆட்­சியைக் கைப்­பற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராகக் கடும் போக்கில் நகரத் தொடங்­கி­யுள்ளார். இது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய மனங்­களில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டின் நிலைமை குறித்து அவர்­களைக் கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. அது மட்­டு­மல்­லாமல், தங்­க­ளு­டைய இருப்­புக்கும் ஆபத்து நேரி­டுமோ என்ற அச்­சத்­தையும் ஊட்­டி­யி­ருக்­கின்­றது.

யுத்­தத்தில் அடைந்த வெற்­றியைத் தனது அர­சியல் முத­லீ­டாக்கி அதி­கார பலத்­தையும், ஆட்சி உரி­மை­யையும் தொடர்ந்து தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணியில் இருந்து பிரிந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, 2015 ஆம் ஆண்டு, ஜனா­தி­பதி தேர்­தலில் அவ­ருக்கு எதி­ராக உயிர் அச்­சு றுத்­த­லுக்கு மத்­தியில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.

தேர்­தலில் வெற்றிபெற்று பத­விக்கு வந்த நான்கு வரு­டங்­க­ளுக்­குள்­ளேயே மீண்டும் மஹிந்த ராஜ­பக் ­ஷவின் கொள்கை வழியில் காலடி எடுத்து வைத்து முன்­னேறத் தொடங்­கி­யி­ருப்­பதன் மூலம் சந்­தர்ப்­ப­வாத அர­சியல் போக்கில் பயணம் செய்­கின்ற பேரின அர­சியல் தலை­வர்­களின் வரி­சையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இடம்­பெற்­றி­ருப்­ப­தையே காட்­டு­கின்­றது.

ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக தேர்தல் காலத்தில் சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக அவர்­க­ளுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுத்து, அதி­கா­ரத்­திற்கு வந்த பின்னர் அவர்­க­ளுக்கு எதி­ரான அர­சியல் பாதையில் நடையைக் கட்­டு­வதே நாட்டின் அர­சியல் வர­லா­றாக உள்­ளது. அந்த வர­லாற்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தனது பங்­கிற்குப் புதுப்­பித்­துள்ளார் என்றே கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஜெனி­வா­வுக்­கான கடும்­போக்குக் குழு

பொறுப்பு கூறும் விட­யத்தில் அர­சாங்கம் கொண்­டுள்ள நிலைப்­பாட்டை நியா­யப்­ப­டுத்தி நிலை­நி­றுத்­து­வ­தற்­காக மூன்று பிர­தி­நி­தி­களைக் கொண்ட விசேட குழு ஒன்றை ஜெனி­வா­வுக்கு அனுப்பி வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிய­மித்­துள்ளார். முன்னாள் அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, மஹிந்த சம­ர­சிங்க மற்றும் வட­மா­காண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்­பெற்­றுள்­ளனர்.

ht8ஜெனிவா செல்லும் அர­சாங்க குழு மீது நம்­பிக்கை இழந்­துள்ள கார­ணத்­தி­னாலேதான், ஜனா­தி­பதி தனது பிர­தி­நி­தி­க­ளாக மூன்று பேர் கொண்ட விசேட குழு­வொன்றை நிய­மித்­துள்­ள­தாக அவ­தா­னிகள் கூறு­கின்­றனர்.

பிழை­யான தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலும், வாய்­மொழி விப­ரங்­களின் ஆதா­ரத்தில் 40 ஆயிரம் பேர் கொல்­லப்­பட்­டார்கள் என்ற நிலைப்­பாட்­டிலும், 2015 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட ஐ.நா. தீர்­மா­னத்தில் இருந்து இலங்­கையை வெளி­யேறச் செய்­வ­தற்­கான வழி­வ­கை­களை ஜனா­தி­ப­தியின் சார்பில் செல்லும் இந்தக் குழு தேடும் என்று பாராளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து வெளி­யி­டு­கையில் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கைக்கு எதி­ரான ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 2015 ஆம் ஆண்டு 30/-1 தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பத்தில் இருந்தே ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை என்றும் தினேஷ் குண­வர்­தன குறிப்­பிட்­டுள்ளார்.

மறு­பு­றத்தில் முன்னாள் அமைச்­சரும் மஹிந்த ராஜ­பக் ­ஷ அர­சாங்க காலத்தில் ஐ.நா.வில் இலங்­கையைப் பிர­தி­நி­தித்­துவம் செய்­த­வ­ரு­மா­கிய மஹிந்த சம­ர­சிங்க ஜனா­தி­ப­தியின் விசேட குழுவில் ஒரு­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களை அதிர்ச்­சிக்கும் ஆச்­ச­ரி­யத்­துக்கும் உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.

இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­ப­டவே இல்­லை­யென்றும், எவ­ருமே காணாமல் போக­வில்லை என்றும் முற்று முழு­தாக மறுத்­துரைத்திருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க, இலங்­கையின் சார்பில் கலந்துகொண்டால், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கலந்துரை­யா­டல்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் எந்த அள­வுக்கு இவ­ரு­டைய கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்ப்­பார்கள் என்று, ஐ.ரீ­.ஜே.பி. என்ற உண்­மைக்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச அமைப்பு கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

இலங்­கையில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதன் பின்னர், மனித உரி­மைகள் விவ­காரம் தொடர்பில் முன்னாள் அமைச்­சரும், மனித உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை என்ற கடும்­போக்­கான நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ள­வ­ரு­மா­கிய மஹிந்த சம­ர­சிங்­கவை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கலந்துகொள்­வ­தற்­காக அனுப்பி வைக்­கின்ற அர­சாங்­கத்தின் நோக்கம் குறித்து அந்த அமைப்பு கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

முன்னாள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க போன்­ற­வர்­களை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்­கான பிர­தி­நி­தி­க­ளாக நிய­மிப்­பது என்­பது, பொறுப்பு கூறு­கின்ற முழு கைங்­க­ரி­யத்­தையும் கீழ­றுக்­கின்ற அல்­லது வலி­தற்­றதாக்­கு­கின்ற ஒரு முயற்­சி­யாகும் என்று உண்­மைக்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச அமைப்பின் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா வெளி­யிட்­டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன, போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்­பதைச் சுட்­டிக்­காட்டி ஏற்­றுக்­கொள்­வதன் அடை­யா­ள­மா­கவே காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­கின்ற நட­வ­டிக்­கையின் ஓர் அம்­ச­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்­பது சர்­வ­தேச மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களின் கருத்­தாகும்.

அதே­வேளை, காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்யும் பணியில் மனித உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை என்று மறுத்­து­ரைக்­கின்ற நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள மஹிந்த சம­ர­சிங்­கவை நிய­மித்­ததன் மூலம், அந்த அலு­வ­ல­கத்தின் மீதான நம்­பிக்­கையை அரசு கேள்­விக்குள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது என்றும் உண்­மைக்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச அமைப்பு ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

அர­சாங்க தரப்பில் பொறுப்பு கூறும் விட­யத்தில் அரசு முரண்­பா­டான நிலைப்­பா­டு­களைக் கொண்டு அதனைக் குழப்­பி­ய­டிப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்ற போதிலும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அர­சியல் தலை­வர்­களும் அவர்­களின் நலன்­களில் உண்­மை­யா­கவே அக்­கறை கொண்­டி­ருக்க வேண்­டிய அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையில் பங்­கு­கொள்­கின்ற அமைப்­புக்­களின் ஊடாக உண்­மை­யான நிலை­மை­களை ஆதா­ர­பூர்­வ­மாக எடுத்­து­ரைக்கத் தவ­றி­யி­ருக்­கின்­றனர் என்று சர்­வ­தேச செயற்­பாட்­டா­ளர்­களும் இரா­ஜ­தந்­தி­ரி­களும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றனர்.

இது விட­யத்தில் திட்­ட­மி­டப்­பட்ட ஓர் ஒழுங்கில் ஆதா­ரங்­களைத் திரட்டி, அவற்றின் அடிப்­ப­டையில் நிலை­மை­களைத் தெளி­வு­ப­டுத்தி கோரிக்­கை­களை முன்­வைத்து சர்­வ­தே­சத்தின் ஆத­ரவைத் திரட்­டு­வ­தற்குப் பதி­லாக அர­சியல் செயற்­பாட்டு நோக்­கத்­தி­லேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள்.இத்தகைய பொறுப்பற்ற போக்கில் இருந்து விடுபடும் வரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கப் போவதில்லை.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com