ilakkiyainfo

சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த!!

சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த!!
June 13
22:33 2017

அசைக்கவே முடியாது என்று எல்லோராலும் கருதப்பட்ட மஹிந்தவின் ஆட்சி 2015 இல் கவிழ்வதகு மூல காணமாக இருந்தவர் முன்னாள்  ஜனாதிபதி  சந்திரிக்காதான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

2005 இல் ஜனாதிபதி பதவியில் இருந்து சந்திரிக்கா ஓய்வு பெறத் தயாரானபோது அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராகவும்  2005 இன் ஜனாதிபதி  வேட்பாளராகவும்  மஹிந்த ராஜபக்ஸவை நியமித்தார்.

சிறிமாவுக்கு எதிராக மஹிந்த செய்த சதிகள் அனைத்தையும் நினைவுபடுத்தி மஹிந்தவை இவ்வாறு நியமிக்க வேண்டாம் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 56 பேர் கூறியும்கூட அதைப் பொருட்படுத்தாமல் சந்திரிக்கா அவரையே நியமித்தார்.

இருந்தும், 2005  ஜனாதிபதி தேர்தலில்  வெற்றி பெற்ற உடனேயே மஹிந்த அவரது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் மஹிந்தவுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு சந்திரிக்கா தொலைபேசி அழைப்பை எடுத்தார்.

சந்திரிகா தனக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கியதைக்கூட நன்றி கூறாது அவரை தூஷணத்தால் திட்டத் தொடங்கினார் மஹிந்த.

இதை சற்றும் எதிர்பார்த்திராத -ஏன் இவ்வாறு ஏசுகிறார் என்று அறியாத சந்திரிக்கா நிலைகுலைந்து போனார்.

சந்திரிக்கா எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.இவ்வாறு 19 நிமிடங்கள் திட்டித் தீர்த்தார் மஹிந்த.

இறுதியில் நன்றி என்று ஒரு வார்த்தையை மட்டும் கூறி தொலைபேசியை வைத்துவிட்டார் சந்திரிகா.

இதன்பிறகு சந்திரிகாவின் பாதுகாப்பையும் குறைத்து சந்திரிக்காவுடன் தேவை இன்றி மோதத் தொடங்கினார் மஹிந்த.

சந்திரிகாவின் இராஜதந்திரம்  தெரியாமல் ஒரு கிராமத்துச் சண்டியன்போல் சந்திரிக்காவுடன் மஹிந்த சண்டை பிடித்தார்.

மஹிந்தவை அரசியலில் இருந்து இல்லாமல் செய்வதற்கு சந்திரிகா அன்றே முடிவு செய்துவிட்டார்.

மஹிந்தவுக்கு எதிரான சந்திரிக்காவின் ஆட்டம்10 வருடங்களின் பின் 2015 ஜனாதிபதித் தேர்தலில்தான் வெற்றி பெற்றது.

இந்தச் சம்பவத்தை மஹிந்தவின் சகாக்கள் சிலர் அண்மையில் மஹிந்தவுக்கு நினைவுபடுத்தினராம்.

இதுக்குத்தான் ஆழம் அறிந்து காலை விடணும் என்றது.இப்ப போச்சா.

எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்]

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com