ilakkiyainfo

சபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் – விரிவான தகவல்கள்

சபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் – விரிவான தகவல்கள்
November 16
21:17 2019

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்ற 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பம்பைவில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், ஆந்திராவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மாற்ற உத்தரவு, தடை இல்லை

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.

சபரிமலை வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்டு வழங்கிய தீர்ப்பு

இந்த நிலையில் 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.

தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

பெண்ணிய செயற்பாட்டளரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து இருந்தார்.

கேரள அரசு

_109713721_2e5df607-782b-4d1b-b97a-bc143b54c2f0இந்த சூழ்நிலையில் சபரிமலைக்கு வரும் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள குழப்பங்கள் பற்றி அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திய பிறகு இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது பற்றி முடிவு செய்வோம் என தெரிவித்து இருந்தார்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com