நடிகை சமந்தாவுக்கு கார் ஓட்ட கற்று தந்தார் நடிகர் நாக சைதன்யா. சினிமா ஹீரோயின்களில் பெரும்பாலானோருக்கு கார் ஓட்ட தெரியும். ஒரு சில நடிகைகள் மட்டும் அதில் ரொம்ப வீக். சமந்தாவை பொறுத்த வரை சுத்தமாக கார் ஓட்ட தெரியாது. படங்களில் கார் ஓட்டும் காட்சி வந்தால் அவருக்கு பதிலாக டூப்தான் கார் ஓட்டுவார்.
மனம் என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா கார் ஓட்டும் காட்சி குளோஸ் அப் ஷாட்டில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டார். ஆனால் தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று அப்பாவித்தனமாக கூறினார் சமந்தா.
ஆனாலும் சில நிமிடமாவது கார் ஓட்டுங்கள் அதை வைத்து சமாளித்து விடுகிறேன் என்றார் இயக்குனர். ஆனால் பயத்தில் சமந்தா தயக்கம் காட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதை கவனித்த நாக சைதன்யா, சமந்தாவிடம் சென்று தான் கார் ஓட்டு கற்று தருவதாக கூறினார்.
சமந்தாவும் சம்மதித்தார். சில மணி நேரம் சமந்தாவுக்கு அருகில் உட்கார்ந்து கார் ஓட்ட கற்றுத் தந்தார் நாக சைதன்யா. பயிற்சிக்கு பிறகு சமந்தா கார் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்டது. இதுபற்றி சமந்தா கூறும்போது, கார் ஓட்டுவதென்றாலே எனக்கு கை நடுங்கும். ஏற்கனவே ஒருமுறை இதுபோல் காட்சியில் நடிக்க கேட்ட போது மறுத்துவிட்டேன்.
அதிர்ஷ்டவசமாக நாக சைதன்யா எனக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்தார். ஒருவழியாக காட்சியில் நடித்து முடித்தேன். யார் மீதாவது இடித்து விடுவோமோ என்று பயந்துதான் ஓட்டினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. காட்சி நன்றாகவே படமானது என்றார்.
ரஜினிக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா
04-03-2014
ரஜினிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. ரஜினி நடித்துள்ள கோச்டையான் வரும் ஏப்ரல் 10ம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் அதிக பொருட்செலவில் உருவாகும் படங்களில் அனுஷ்காதான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இரண்டாம் உலகம் படத்தை அடுத்து பாஹுபலி, ராணி ருத்ரமம்மா தேவி என 2 டோலிவுட் பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படம் தமிழிலும் உருவாகிறது.
ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இப்படங்களில் நடித்து வருவதால் கடந்த 1 ஒரு வருடமாக புதிய படங்கள் எதையும் அனுஷ்கா ஒப்புக்கொள்ளவில்லை.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் ரஜினியின் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவரிடம் ரவிகுமார் பேச்சு நடத்தி வருகிறார் என கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.