சம்பந்தர் சுமந்திரன் பயணித்த வாகனம் மீது செருப்பை எறிய முற்பட்ட பெண் ; மடக்கி பிடித்த பொலிஸார்

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகன தொடரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்ட போது பொலிஸார் அவரை மடக்கி பிடித்தனர்.
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முடிவெடுப்பதற்காக கூடியிருந்தது.
இதன்போது வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டபோது பொலிஸார் அவர்களை கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந் நிலையில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தமிழரசுக்கட்சியின் கூட்டம் முடிவடைந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகாப்பு வாகனத்தொடரணியில் வெளியேறியிருந்தனர்.
இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அதிகளவு பொலிஸார் மூலம் வாகத்தொடரணியை நெருங்காது தடுத்து வைத்திருந்தனர்.
இந் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் தனது செருப்பை கழற்றி வாகனத்தொடரணி மீது எறிய முற்பட்டபோது அவரை அங்கிருந்த பொலிஸார் மடக்கி பிடித்தனர்.
இதனால் கோபமுற்ற குறித்த தாய் பொலிஸாரை ஏசியதுடன் துரோகம் செய்வதாகவும் தெரிவித்தார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment