ilakkiyainfo

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ராஜபக்சக்கள்!

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ராஜபக்சக்கள்!
September 10
04:32 2016

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு கண்காணிப்பு உறுப்பினர் ஒருவருக்கு கொலை குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை இழக்க செய்யும் ஒரு விடயமாக மாறியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இராணுவத்திற்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமையினால் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் சர்வதேச கொள்கையின் தரத்தின் காரணமாக அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், துமிந்த சில்வாவுக்கான மரண தண்டனை மற்றுமொரு நெருக்கடியை கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களான ராஜபக்சகளுக்கு ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது கடந்த ஆட்சியின் போது தற்போதைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போர் தளபாடங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவரின் பதவியும் பறிக்கப்பட்டது.

ஆனால் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தாபாய ராஜபக்சவுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடி மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டுள்ளன. எனினும், அவருக்கு எதிராக இது வரையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

துமிந்த சில்வாவுக்கு எதிராக கொடூரமான குற்றங்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் அவரை பாதுகாப்பு அமைச்சில் கண்காணிப்பு உறுப்பினராக கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டமை தவறான ஒரு நடத்தையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது சர்வதேச ரீதியாக மஹிந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும் என அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com