ilakkiyainfo

சற்றுமுன்னர் ஏ9 பிரதான வீதியில், யாழில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில், 10பேர் ஸ்தலத்தில் பலி (வீடியோ, படங்கள்)

சற்றுமுன்னர் ஏ9 பிரதான வீதியில், யாழில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில், 10பேர் ஸ்தலத்தில் பலி (வீடியோ, படங்கள்)
December 17
09:22 2016

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

மாதம்பயில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி கயஸ் வாகனத்தில் பயணித்த 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், கயஸ் வாகனத்தில் பயணித்த ஏனைய மூன்றுபேர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இப்பொழுது யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

இதேவேளை உயிரிழந்த 10 பேரது சடலங்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக ரெதரிவிக்கப்பட்டுள்ளது.

15584996_588970937968850_4435010004082310375_o15625750_588970931302184_7793868930122787076_o15621585_1189352087784553_2849350350117447688_na15542346_1825857864353570_2121096326044645898_n15541631_1825858347686855_2901684186603313563_n15541672_1825858371020186_7976786972989062746_n15584996_588970937968850_4435010004082310375_o-1

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com