ilakkiyainfo

சல்மான்கான் தங்கை திருமண சடங்கில் பங்கேற்று இன்ப அதிர்ச்சி அளித்த ஷாருக்கான்

சல்மான்கான் தங்கை திருமண சடங்கில் பங்கேற்று இன்ப அதிர்ச்சி அளித்த ஷாருக்கான்
November 17
17:15 2014

மும்பை: பாலிவுட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ‘எலியும்-பூனையுமாக’ இருந்த நடிகர்கள் சல்மான்கானும், ஷாருக்கானும் இன்று ஒருவரையொருவர் கட்டித்தழுவி இருதரப்பு ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

சல்மான்கானின் தங்கையான அர்பிதாகானுக்கும் டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கும் நாளை (18-ம் தேதி) ஐதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்தையொட்டி, மணமகளுக்கு மருதாணி இடும் நலங்குச்சடங்குகள் மும்பையில் உள்ள சல்மான்கானின் வீட்டில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த சடங்கில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

யாரும் எதிர்பாராத வகையில் வாசலில் வந்து நின்ற ஒரு சொகுசுக்காரில் இருந்து இறங்கி உள்ளே சென்ற அந்த பாலிவுட் பிரபலத்தை பார்த்த சிலர், அதிர்ச்சியில் தங்கள் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டனர்.

srk-salman-arpita_625x300_71415861901ஆம், சுமார் ஐந்தாண்டு காலமாக ஒன்றன்பின் ஒன்றாக உருவான ஏராளமான அபிப்ராய பேதங்களால் ‘எலியும்-பூனையுமாக’ இருந்த சல்மான்கானும், ஷாருக்கானும் இந்த திருமணத்தையொட்டி சந்திப்பார்கள் என்று அவர்களில் யாரும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

நேராக, உரிமையுடன் வீட்டினுள் சென்ற ஷாருக்கான், மணமகளின் அருகே நின்றிருந்த சல்மான்கானை கட்டித்தழுவி நலம் விசாரித்தார். பின்னர் சல்மான்கானும், ஷாருக்கானும் மணமகள் அர்பிதாவின் தலையில் முத்தமிட்டு வாழ்த்தினர்.

இந்த காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் ‘இன்ஸ்ட்டாகிராமில்’ வெளியானதையடுத்து, இருதரப்பு ரசிகர்களும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்துக்கொண்டிருக்கின்றனர்.

salman-arpita_625x300_41415890570

Arpita Khan’s wedding card.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com