Site icon ilakkiyainfo

சாமி”யின் சதியால்தான் ஜெயாவுக்குத் தண்டனை

 

ஜெய­ல­லி­தா­வுக்கு சிறைத்­தண்­டனைக் கிடைக்க காரணம் சுப்பி­ர­ம­ணிய சாமிக் கூட்­ட­ணியின் சதியே என்று கடும் குற்­றச்­சாட்டை வீசு­வது அ.தி.மு.க. வோ அல்­லது அந்தக் கட்­சியின் ஆத­ரவு அமைப்போ அல்ல.

அ.தி.மு.க.வின் பர­ம­வைரிக் கட்­சி­யான தி.மு.க.வை சேர்ந்த பொதுக்­குழு உறுப்­பினர் ஒரு­வர்தான் இப்­ப­டிக்­குற்றம் சாட்­டினார். இவரின் பேச்சு தி.மு.க. வட்­டா­ரத்தில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின் ­றது.

அ.தி.மு.க. பொதுச் செய­லாளர் ஜெய­ல­ லி­தா­வுக்குத் தண்­டனை கிடைத்­ததை தொட ர்ந்து தி.மு.க.வினர் வெளிப்­ப­டை­யாகப் பட்­டாசு வெடித்து கொண்­டாடா விட்­டாலும் உள்­ளூர மகிழ்­கின்­றனர்.

ஆனால், தூத்­துக்­குடி மாவட்­டத்தைச் சேர்ந்த அந்தக் கட்­சியின் பொதுக்­குழு உறுப்­பி­னரும் தலை­மைக்­க­ழக பேச்­சா­ள­ரு­மான வக்கீல் புதுப்­கோட்டை செல்வம் என்­பவர் ஜெய­ல­லி­தா­வுக்கு ஆத­ர­வாகப் பேசிப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி வரு­கின்றார்.

இது­பற்றி அவ­ரிடம் கேட்­ட­போது, தமி­ழர்­களின் வாழ்­வு­ரி­மைக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்த ஜெய­ல­லி­தா­வுக்கு நீதி­மன்றம் மூலம் அநீதி ஏற்படுத்தப்பட்டுள்­ளது.

காவிரி, முல்லைப் பெரி­யாறு பிரச்­சி­னையில் உச்ச நீதி­மன்றம் வரை போய் சட்டப் போராட்டம் நடத்­தியும் சட்­ட­மன்­றத்தில் தீர்­மானம் நிறைவேற்­றியும் தமி­ழர்­களின் வாழ்­வு­ரி­மையை காப்­பாற்­றிய பெருமை ஜெய­ல­லி­தா­வுக்கு உண்டு.

இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன் ஆகிய மூன்று பேரையும் விடு­தலை செய்ய வேண்டும் என்று சட்­ட­மன்­றத்தில் தீர்மானம் நிறை­வேற்­றி­ய­தோடு அதற்­காக அவர் உச்ச நீதி­மன்­றம்­வரை போய் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்றார்.

1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலை­மை­யி­லான மத்­திய அரசு கவிழ்ந்த பிறகு காங்­கிரஸ் மற்றும் ஜெய­ல­லிதா ஆத­ர­வுடன் நாட்டில் பிர­தமர் ஆச­னத்தில் அமர்ந்து விடலாம் என்று சாமி நினைத்தார். அதற்கு ஜெய­ல­லிதா ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை. அதனால், ஜெய­ல­லி­தாவைப் பழி­தீர்க்க அவர் நேரம் பார்த்­துக்­கொண்­டி­ருந்தார்.

இப்­படி பொளந்து கட்­டினார் புதுக்­கோட்டை செல்வம்.

தி.மு.க.வில் முக்­கிய பொறுப்பில் இருக்கும் நீங்­களே இப்­படிக் கட்­சிக்கு விரோ­த­மாகப் பேச­லாமா? அ.தி.மு.க.வில் சேரும் முடி­வில்தான் நீங்கள் இப்­படிப் பேசு­வ­தாக சொல்­லப்­ப­டு­கி­றதே உண்­மையா? என்று கேட்ட­போது, கரு­ணா­நி­தியைப் பொறுத்­த­வரை எந்த விஷ­ய­மாக இருந்­தாலும் தனது கருத்தை ஆணித்­த­ர­மாக சொல்­லக்­கூ­டி­யவர்.

ஆனால் இந்த விஷ­யத்தில் ஒரு­வா­ர­காலம் மௌன­மாக இருந்து விட்டு இப்­போ­துதான் பேசத்­தொ­டங்­கி­யி­ருக்­கின்றார். இது அவ­ருக்கு இருக்கும் பயத்தையே காட்­டு­கின்­றது. காரணம் விரைவில் அவ­ரது குடும்­பத்­தினர் ஒவ்­வொ­ரு­வ­ராக ஜெயி­லுக்குப் போகும் சூழ்­நிலை இருக்­கின்­றது.

முன்னாள் தி.மு.க. அமைச்­சர்கள் பெரும்­பா­லானோர் மீது சொத்­துக்­கு­விப்பு வழக்கு இருக்­கின்­றது. அத­னால்தான் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு பற்­றிப்­பே­சவே பயந்து கொண்­டி­ருந்தார் கரு­ணா­நிதி.

அண்ணா தொடங்­கிய தி.மு.க போர்க்­குணம் கொண்ட கட்சி. ஆனால் இன்­றைக்கோ பல் இல்­லாத பாம்­பாகக் காட்­சி­ய­ளிக்­கின்­றது. தலைமை முதல் மாவட்டம் வரை கடந்த 30 வரு­டங்­க­ளாக குடும்ப அர­சி­யலே நடந்து வரு­கின்­றது.

இதனால் தி.மு.க. தொண்­டர்கள் விரக்­தியில் இருக்­கின்­றார்கள். மு.க. அழ­கி­ரிக்கு தென்­மண்­டல அமைப்புச் செய­லாளர் பத­வியைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மத்­திய அமைச்சர் ஆக்­கப்­பட்டார். ஆனால் 5 வருட காலத்தில் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு தடவை கூட அழ­கிரி பேசி­யதே இல்லை.

அதன்­மூலம் ஜன­நா­யக அமைப்­பையே கேவ­லப்­ப­டுத்­தி­விட்டார் கரு­ணா­நிதி.

இலங்கைத் தமி­ழர்­க­ளுக்­காகக் காங்­கி ரஸ் கூட்­ட­ணியை விட்டு வெளியே வந்­த­தாகச் சொன்ன கரு­ணா­நிதி, மகள் கனி­மொ­ழியை எம்.பி.யாக்க காங்­கிரஸ் கட்­சியின் காலில் போய் விழுந்தார் கொள்கை விஷ­யத்தில் சறுக்­கிய கரு­ணா­நிதி கட்சி விஷ­யத்­திலும் மோச­மான போக்கையே கடைப்­பி­டித்து வருகின்றார்.

இதனால் அந்­தக்­கட்சி மீது இருந்த மரியாதை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரு கின்றது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசியதற்காக என்மீது நடவடிக்கை பாய்ந்தால் அதையும் சந்திக்க நான் தயாராக இரு க்கின்றேன் என்றார்.

இவ்வாறு சொன்ன புதுக்கோட்டை செல்வம் இன்னும் நிறையச்சொல்ல வேண்டியிருக்குது. அதை நேரம் வரும்போது சொல்கிறேன் என சஸ்பென்ஸுடன் கூறி முடித்தார்.

“Sahwa forces” – பக்தாத்தை காப்பதற்கு தயாராகும் இறுதி இராணுவம்…!!

பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்!

Exit mobile version