ilakkiyainfo

சிறுமி துஷ்பிரயோகம்: காதல் நாடகமாடியவர் உட்பட நால்வர் கைது

சிறுமி துஷ்பிரயோகம்: காதல் நாடகமாடியவர் உட்பட நால்வர் கைது
September 20
10:43 2016

பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் உட்பட  4 சந்தேகநபர்களை, பருத்தித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (20) கைதுசெய்தனர்.

34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

அதன்பின்னர், இந்த விடயத்தை வெளியில் தெரிவித்தால் கொலை செய்வேன் எனச் சிறுமியை மிரட்டியுள்ளார்.

எனினும், நடந்த விடயத்தை சிறுமி, தனது தாயாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, தாயார் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

அதற்கிணங்க பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனினும், போதிய ஆதாரங்கள் இல்லையெனவும், பொய்யான முறைப்பாடு எனத் தெரிவித்து சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை, இந்த விடயத்தைச் சமூக ஆர்வலர் ஒருவர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். அதற்கிணங்க அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் சந்தேகநபர்கள், இன்று கைதுசெய்யப்பட்டனர்.

சிறுமி, மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com