பதுளை பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் விளையாட்டு பொருள் ஒன்றை திருடி விட்டதாக கூறி சிறுவன் கையில் கடை உரிமையாளர் கத்தியை கொடுத்து அவனது கையை அறுத்துக் கொள்ளுமாறு துன்புறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடந்துள்ளது. இச் சம்பவத்தின் பின்னர் குறித்த கடை உரிமையாளரே சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலை விசாரணையின் போது சிறுவன் அவனது சுய விருப்பத்தின் பேரிலேயே கையை அறுத்துக் கொண்டதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

சிறுவனின்  பெற்றோரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் சிறுவனை விசாரித்த போது சிறுவன் கடை உரிமையாளர் தன்னை கையை அறுத்துக் கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளான்.

சிறுவனின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு குறித்த கடை உரிமையாளரை இன்று காலை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த கடை உரிமையாளரை பதுளை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.