ilakkiyainfo

சிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா!

சிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா!
December 07
15:16 2019

 

“சிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான்”

 

‘ஞான அஞ்­சனம்’. இந்தப் பெயரை கேட்­டாலே அதிர்­கி­றார்கள் நித்­தி­யா­னந்­தா­வி­ட­மி­ருந்து பிரிந்து வந்­த­வர்கள். “பல ஆண்­டு­க­ளாக எங்­களை வசி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­ததே இந்த ஞான அஞ்­ச­னம்தான்” என்று சொல்லி நம்மை அதி­ர­வைக்­கி­றார்கள் அவரால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். `வசிய மை தடவி வலைக்குள் விழ­வைத்­து­விட்டார்’ என்­ற­ரீ­தியில் இருக்­கின்­றன அவர்கள் சொல்லும் சம்­ப­வங்கள்.

நித்­தி­யா­னந்­தாவின் பிடதி ஆசி­ர­மத்தில் நடை­பெறும் 21 நாள் பயிற்சி முகாமில் பங்­கேற்கச் சென்­றுள்ளார், சென்­னையைச் சேர்ந்த தொழி­ல­திபர் ஒரு­வரின் மகன். பிட­திக்குச் சென்­றவர் திரும்பி வர­வே­யில்லை. ஒரு­கட்­டத்தில் `சந்­நி­யாசி ஆகப்­போ­கிறேன்’ என்றார் இளைஞர்.

அதிர்ந்­து­போன பெற்றோர், பிட­திக்குச் செல்­கி­றார்கள். மகனை மீட்க பல­கட்டப் போராட்­டங்­களில் ஈடு­ப­டு­கி­றார்கள். ஆனால், அவை அவ்­வ­ளவு சுல­ப­மா­ன­தாக இல்லை.

‘உங்கள் மகன் வந்தால் அழைத்துச் செல்­லுங்கள். நாங்கள் என்ன கட்­டிப்­போட்டா வைத்­தி­ருக்­கிறோம்?’ என்று கூளாகச் சொல்­கி­றார்கள் ஆசி­ரம நிர்­வா­கிகள். மக­னிடம் பேசினால் பதி­லுக்கு, ‘ம்ம்ம்ம்… நித்­தி­யா­னந்தா பர­ம­ஹம்ச யோகம். ம்ம்ம்ம்… நித்­தி­யா­னந்த பர­ம­ஹம்ச யோகம்…’ என்று மந்­தி­ரம்போல் உச்­சா­டனம் செய்­கிறார்.

ஒரு­வ­ழி­யாக அர­சியல் பிர­முகர் ஒருவர் மூலம் சில மாதங்­க­ளுக்குப் பிறகு ஆசி­ர­மத்­தி­லி­ருந்து மகனை மீட்­டி­ருக்­கி­றார்கள். ஆனால், வீட்­டுக்கு வந்த பிறகும் மகனின் நட­வ­டிக்­கையில் மாற்ற மில்லை. தினமும் காலையில் நித்­தி­யா­னந்­தாவின் புகைப்­ப­டத்­துக்கு பூஜை­செய்­வது, அவ­ரது பெயரை சதா­சர்வ காலமும் உச்­ச­ரிப்­பது என்­றி­ருக்­கிறார் இளைஞர்.

கடும் வேத­னை­ய­டைந்­த­வர்கள், மகனை மனோ­தத்­துவ நிபுணர் ஒரு­வ­ரிடம் அழைத்துச் சென்­றனர். அவர், “உங்கள் மகனை உள­வி­யல்­ரீ­தி­யாக அடி­மை­யாக்­கி­வைத்­துள்ளார் அந்தச் சாமியார்.

அவரின் பெயரை உச்­ச­ரிப்­ப­தையும், அவர் படத்­துக்கு பூஜை­செய்­வ­தையும் முதலில் தடுங்கள். எல்லாம் சரி­யா­கி­விடும்” என்று கூறி­யுள்ளார்.

அதை கொஞ்சம் கொஞ்­ச­மாகச் செய்ய ஆரம்­பித்த பிற­குதான் அந்த இளைஞர் இயல்­பு­நி­லைக்குத் திரும்­பி­யுள்ளார். முது­கலைப் பட்டம் பெற்ற அந்த இளைஞர், பிட­திக்குப் போகும் முன்பு எல்­லோ­ரை­யும்போல் சரா­சரி இளை­ஞ­ராக இருந்­த­வர்தான்.

நித்­தி­யா­னந்­தா­விடம் தீட்சை பெற்ற பிறகே பெற்­றோ­ரையே மறந்து, மறுக்­கு­ம­ள­வுக்கு மன­ரீ­தி­யாக மாற்­ற­ம­டைந்­துள்ளார்.

நம்மை நேரில் சந்­தித்த அவ­ரிடம், “எப்­படி இது நேர்ந்­தது?” என்று கேட்டால் “அதுதான் எனக்கும் புரி­ய­வில்லை” என்று சில தக­வல்­களை மட்டும் நம்­மிடம் சொல்லி அதி­ர­வைத்தார்.

தீட்­சையே திற­வுகோல்!

“நித்­தி­யா­னந்­தாவின் பின்னால் இத்­தனை பெண்­பக்­தர்கள், ஆண்­பக்­தர்கள் திரள்­வ­தற்கு அடிப்­படைக் கார­ணமே அவர் அளிக்கும் 21 நாள் பயிற்சி முகாம்தான்.

ஆரம்­பத்தில் யோகம், தியானம், ஆன்­மிகச் சொற்­பொ­ழிவு என்­றுதான் பயிற்சி ஆரம்­பிக்கும். ஒரு­கட்­டத்தில் `நித்­தி­யா­னந்­தாவின் நேரடி தீட்சை’ என்ற நிகழ்வு அரங்­கேறும். முகாமில் கலந்­து­கொள்­ப­வர்கள் வரி­சை­யாகச் சென்று நித்­தி­யா­னந்­தாவின் முன் அமர வேண்டும்.

அவர்கள், நித்­தி­யா­னந்­தாவின் கண்­களை நேருக்­குநேர் சில நொடிகள் பார்க்க வேண்டும். அப்­போது பக்­தர்­களின் இரு கண்­க­ளுக்கு இடை­யி­லான நெற்­றிப்­பொட்டில் நித்­தி­யா­னந்தா தன் விரலை வைத்து அழுத்­துவார்.

பிறகு, கறுப்பு நிற மையை அங்கு தட­வி­வி­டுவார். அப்­போது எங்­க­ளையும் அறி­யாமல் உட­லுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்­படும். அந்தக் கறுப்பு மைக்கு ஆதி­னத்தில் சொல்­லப்­படும் பெயர் ‘ஞான அஞ்­சனம்’. நித்­தி­யா­னந்­தா­விடம் தீட்சை பெற்ற அனை­வ­ருமே அந்த மையை தினமும் தங்­க­ளது நெற்­றியில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

பிறகு, நித்­தி­யா­னந்­தாவின் பாத அட்­டிகை என்று அவர் அணியும் செருப்பின் மாதி­ரியை சிறிய அளவில் வெண்­க­லத்தில் செய்து வைத்­திருப் பார்கள்.

தீட்சை பெற்­ற­வர்­க­ளுக்கு அதைக் கொடுத்து, `தினமும் காலை எழுந்­த­வுடன் அதற்கு பூஜை செய்ய வேண்டும்’ என்று அறி­வு­றுத்தப் படு­வார்கள். தினமும் அதி­காலை எழுந்­ததும் ‘ம்ம்ம்ம்… நித்­தி­யா­னந்த பர­ம­ஹம்ச யோகம்’ என்ற மந்­தி­ரத்தை உச்­ச­ரித்­துக்­கொண்டே இருக்க வேண்டும்.

ஞான அஞ்­ச­னத்தை நெற்­றியில் பூசி­ய­துமே பலர் நித்­தி­யா­னந்­தாவின் பேச்­சுக்கு மகு­டிபோல் ஆட ஆரம்­பிப்பர். இப்­ப­டித்தான் அவரின் பிடியில் பலரும் சிக்­கி­யுள்­ளார்கள்” என்றார்.

அதென்ன ‘ஞான அஞ்­சனம்’?

நித்­தி­யா­னந்தா மீது புகார் கொடுத்­தி­ருக்கும் ஜனார்த்­தன சர்­மா­விடம், “ஞான அஞ்­சனம் என்றால் என்ன?” என்று கேட்டோம்.

“அது ஒரு­வி­த­மான மை. நித்­தி­யா­னந்­தா­வுக்­காக கேர­ளத்­தி­லி­ருந்து அந்த மை கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. அனை­வரும் அதை கண்­டிப்­பாக நெற்­றியில் வைத்­துக்­கொள்ள வேண்டும். முதல்­முறை மட்டும் அந்த மையை நித்­தி­யா­னந்தா நமக்கு வைத்­து­வி­டுவார். அதற்குப் பிறகு மை டப்­பாவை நம்­மிடம் கொடுத்­து­வி­டு­வார்கள்.

அந்த மையை வைத்­துக்­கொண்டு நித்­தி­யா­னந்­தாவின் பெயரை தினமும் உச்­ச­ரித்­துக்­கொண்­டி­ருக்கும் நபர்­களை நித்­தி­யா­னந்தா பிடி­யி­லி­ருந்து மீட்­பது கடினம்” என்றார் அச்சம் வில­காமல்.|

சது­ரங்க வேட்­டை­யா­டிய நித்தி!

நித்­தி­யா­னந்­தா­வுக்கு இந்­தி­யாவில் தற்­போது 300 ஆசி­ர­மங்கள் இருக்­கின்­றன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்­பி­லான சொத்­துகள் அவர்­வசம் உள்­ள­தாகச் சொல்­கி­றார்கள்.

கடந்த பத்து ஆண்­டு­க­ளில்தான் நித்­தியின் சொத்து பல­ம­டங்கு பெரு­கி­யி­ருக்­கி­றது. அதற்கு தன்­னிடம் வரு­பவர் களிடம் அவர் ஆடிய சது­ரங்க வேட்­டையும் ஒரு காரணம் என்­கி­றார்கள்.

“நித்­தி­யா­னந்­தாவின் பக்­தர்கள், உலகம் முழு­வதும் வசிக்­கி­றார்கள்.

வச­தி­ப­டைத்த பலர், ஏதா­வது ஒரு பிரச்­னையில் சிக்­கி­யி­ருப்­பார்கள். அவர்­களைச் சந்­திக்கும் நித்­தியின் பக்­தர்கள், ‘சுவா­மி­ஜியைச் சந்­தித்­து­வா­ருங்கள். உங்கள் பிரச்­னைகள் நொடியில் வில­கி­விடும்’ என்று வலை­வி­ரிப்­பார்கள்.

சரி­யென்று நித்­தியைச் சந்­திக்கச் சென்றால் போதும்… அடுத்து சது­ரங்க வேட்டை ஆரம்­ப­மாகும். பிரச்­னையைச் சொல்லி தன்­னிடம் தீர்வு கேட்­பவர் களிடம் தன் வார்த்தை ஜாலத்தால் முதலில் வசி­யப்­ப­டுத்­துவார் நித்­தி­யா­னந்தா. பிரச்­னைக்குத் தீர்­வாக ஒரு பரி­கா­ரத்தைச் செய்யச் சொல்வார்.

சிக்­கி­ய­வர்­களின் வச­திக்­கேற்ப, ‘கோயில் கட்­டினால் சரி­யாகும்’, ‘கோசாலை அமை­யுங்கள்’, ‘தங்கத் தேர் செய்து ஆசி­ர­மத்­துக்கு அளி­யுங்கள்’ என்று வித­வி­த­மாக பரி­கா­ரங்கள் சொல்வார்.

ஆனால், இவற்­றை­யெல்லாம் சம்­பந்தப்பட்ட நபர்கள் நேர­டி­யாகச் செய்ய முடி­யாது. ஆசி­ர­மத்­திடம் தொகையைத் தந்­து­விட வேண்டும்.

இப்­படி பல­ரிடம் இட­மா­கவும், தொகை­யா­கவும், தங்க நகை­க­ளா­கவும் பெற்­றதே பல நூறு கோடி ரூபாய் தேறும். பரி­கா­ர­மாக இவர்கள் சொன்ன எதையும் ஆசி­ர­மத்­தினர் செய்­த­தில்லை” என்று கொந்­த­ளிக்­கி­றார்கள் நித்­தி­யிடம் பணம் கொடுத்து ஏமாந்­த­வர்கள்.

பெண் சிஷ்­யை­க­ளை­வைத்து வலை!

நித்­தி­யா­னந்­தாவின் விவ­காரம் வெளியே வந்­து­கொண்­டி­ருக்கும் நிலையில், அவரால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் பலரும் சமூக வலை­த­ளத்தில் பல்­வேறு கருத்­து­களைப் பகிர்ந்­து­வ­ரு­கி­றார்கள்.

“எங்­களைப் போன்ற பெண் சிஷ்­யை­களை, தொழி­ல­தி­பர்­களைச் சந்­திக்க அனுப்­புவார் சுவா­மிஜி. தொழில் அதி­பர்­க­ளிடம் நித்­தி­யா­னந்­தாவின் அருமை பெரு­மை­களைப் பேசி பணத்தைக் கறக்க வேண்டும் என்­பதே எங்­க­ளுக்குத் தரப்­பட்ட அசைன்மென்ட். அப்­படி பல­ரி­ட­மி­ருந்து பத்து லட்சம் முதல் மூன்று கோடி ரூபாய் வரை வசூல் செய்­துள்ளோம்.

சில­ச­மயம், தொழி­ல­தி­பர்­க­ளிடம் பாலி­யல்­ரீ­தி­யாக இச்­சையைத் தூண்டி பணம் வசூ­லிப்­பதும் நடந்­துள்­ளது. அழ­கிய இளம் பெண்­க­ளுடன் நித்தி அடிக்­கடி புகைப்­ப­டங்கள் வெளி­யி­டு­வதே பாலியல் சப­லங்­களை பொது­வெ­ளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்­திதான்.

அக­ம­தாபாத் ஆசி­ர­மத்தில் குஜராத் பொலிஸார் பறி­முதல் செய்த இரண்டு லேப்­டாப்­களில் இது­போன்ற அந்­த­ரங்­க­மான பல வீடி­யோக்கள் இருக்­கின்­றன” என்­றார்கள். நித்­தி­யா­னந்தா பிட­தியில் இருந்­த­வரை அந்த ஆசி­ர­மத்தில் 25 பெண் சீடர்கள் இருந்­துள்­ளார்கள். அவர்­களில் 13 பேர் நித்­தியின் ஆஸ்­தான சிஷ்­யைகள்.

நித்­தி­யா­னந்­தா­வுக்­கான பணி­விடை களை அந்தப் பெண் சிஷ்­யைகள் மட்­டுமே செய்ய வேண்டும். அந்த 13 பேரையும் அழைத்துக் கொண்­டுதான் வெளி­நாட்டுப் பய­ணத்­தையே மேற்­கொண்­டுள்ளார் நித்தி. அங்கு பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த மேலும் சில பெண்­பக்­தை­களும் உடன் இருக்­கி­றார்கள்.

தற்­போது மூன்று ஆண் சீடர்கள் மட்­டுமே நித்­தி­யுடன் இருப்­ப­தாகச் சொல்­கி­றார்கள் பிடதி ஆசி­ர­மத்தில் இருப்­ப­வர்கள்.

இன்­டர்போல் ஆக்‌ஷன்!இவ்­வ­ளவு களே­ப­ரங்­க­ளுக்குப் பிறகு, நித்­தி­யா­னந்­தாவைப் பிடிக்க இன்­டர்போல் அமைப்பின் உத­வியை நாடி­யி­ருக்­கி­றது குஜராத் காவல்­துறை. அவ­ரது பெயரை ‘ரெட் ரிப்போர்ட்’ என்­ற­ழைக்­கப்­படும் அபா­ய­க­ர­மான பட்­டி­யலில் சேர்க்கும் முயற்­சி­யிலும் ஈடு­பட்­டுள்­ளது மத்­திய அரசு.

இதற்­கி­டையே குஜராத், அக­ம­தாபாத் மாவட்டம், ஹீரா­பூரில் செயல்­பட்­டு­வந்த நித்­தியின் ஆசி­ர­மத்தை அந்த மாவட்ட ஆட்­சியர் உத்­த­ரவின் அடிப்­ப­டையில் சீல் வைத்­துள்­ளது குஜராத் காவல்­துறை.

`ஜனார்த்­தன சர்­மாவின் மகள்கள் இரு­வ­ரையும் டிசம்பர் 10-ம் தேதிக்குள் நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டைக்க வேண்டும்’ என்று குஜராத் காவல்­து­றைக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது அக­ம­தாபாத் உயர் நீதி­மன்றம். நித்தி, இதற்­கெல்லாம் அச­ர­வே­யில்லை… ‘நான் உரு­வாக்­கப்­போகும் கைலாசா தீவுக்கு அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரிகள் தேவை’ என்று ஆன்­லைனில் விளம்­பரம் ­கொ­டுத்­துள்ளார் நித்தி!

-“குடும்­பத்­தி­ன­ருடன் மனம்­விட்டுப் பேசுங்கள்!”

“மை தடவி ஒரு­வரை வசி­யப்­ப­டுத்த முடி­யுமா?” என்று சேலத்தைச் சேர்ந்த மன­நல மருத்­துவர் மோகன வெங்­க­டா­ச­ல­ப­தி­யிடம் கேட்டோம்.

“விஞ்­ஞா­னத்­துக்குப் பொருந்­தாத விஷ­யங்­களைப் பேச முடி­யாது. பொது­வாக, பெரி­ய­ளவில் பிரச்­சி னையில் சிக்­கி­ய­வர்­களே சாமி­யார்­க­ளிடம் செல்­வார்கள்.

சாமி­யாரைப் பற்றி ஏற்­கெ­னவே இவ­ரிடம் ஏற்­ப­டுத்தப் பட்டிருக்கும் மாய பிம்பங்கள், ‘அவரிடம் சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்பதை அவர்களின் ஆழ்மனதில் பதியச்செய்திருக்கும். தவிர, பிரச்சினைகள் ஏற்படுத்திய காயங்களால் மனச்சோர்வு ஏற்பட்டு, அது மன அழுத்தத்தில் தள்ளிவிடும். அப்படியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன்

மங்கிவிடும். இதனால், பிடியைக்கண்ட கொடியைப்போல் ஆறுதலாகப் பேசும் சாமியார்கள்வசம் வீழ்ந்துவிடுவார்கள்.

லெள­கீக வாழ்வில் பிரச்சி­னைகள் அனை­வ­ருக்­குமே ஏற்­ப­டும்தான். இதை, தங்­க­ளுக்கு நெருக்­க­மான குடும்ப உற­வு­க­ளிடம் மனம்­விட்டுப் பேசி­னாலே சரி­செய்­து­வி­டலாம். அப்­போதும் சரி­யா­க­வில்­லை­யெனில், மன­நல நிபு­ணர்­க­ளிடம் கவுன்­சலிங் பெறலாம்.

சட்­ட­ரீ­தி­யான பிரச்சி­னைகள் என்றால் சட்ட நிபு­ணர்­களை அணு­க லாம். ஆனால், குடும்­பத்­திலோ நட்பு வட்­டா­ரத்­திலோ ஆறு­த­லுக்­குக்­கூட யாரும் பேச முன்­வ­ரா­த­போ­துதான் இது­போன்ற சாமி­யார்­க­ளிடம் மக்கள் சர­ணா­கதி அடைந்­து­வி­டு­கி­றார்கள். எனவே, முதலில் ஈகோ பார்க்காமல் மனம் விட்டுப் பேசுங்கள்” என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com