ilakkiyainfo

சீனாவில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 33 பேர் பலி (அதிர்ச்சி படங்கள்)

சீனாவில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 33 பேர் பலி (அதிர்ச்சி படங்கள்)
March 02
11:34 2014
பெய்ஜிங்: சீனாவில் ரயில் நிலையத்தில் புகுந்த 10 பேர் கொண்ட மர்மக் கும்பல் நடத்திய திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாகப் பலியானார்கள்.chinaமேலும், இத்தாக்குதலில் படுகாயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர். சீனாவில் உள்ள தென்மேற்கு பகுதியில் இருக்கும் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் ரயில் நிலையத்தில் நேற்றிரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று கைகளில் கத்திகளுடன் நுழைந்து அங்கிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.china-1
இந்தத் திடீர்த் தாக்குதலை சற்றும் எதிர்பாராத மக்கள் பயத்தில் அலறி உயிரைப் பாதுகாத்துக் கொள்ள சிதறி ஓடியுள்ளனர். ஆனபோதும், இத்தாக்குதலில் 33 அப்பாவி பொது மக்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

china-2

மேலும், தாக்குதலில் காயமடைந்த 130 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் நான்கு சதிகாரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.china-3மேலும், ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கறுப்பு நிற உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக என்று கூறப்படுகிறது.china-4
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள பிரிவினைவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவத்திற்கு சீன அதிபர் ஷி ஜிங்பி மற்றும் பிரதமர் லி கெஹியாங், ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.china-5china-7china-8china-9china-10

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 

Latest Comments

சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com