வடகொரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் சீனாவில் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

கொரியாவின் எதிர்கால முயற்சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

வடகொரிய பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர் அல்லது சீனா ஆண்களை திருமணம் செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்புகள்  வருடாந்தம் 100 மில்லியன் டொலர்களை வரை வருமானம் உழைக்கின்றன என அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவால் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள வடகொரியர்களே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்என அந்த அறிக்கை தெரிவித்துள்ளதுடன் இந்த பெண்கள் 30 யுவானிற்காக விற்கப்படுகின்றனர்  ,1000 யுவானிற்கு இவர்களை சீன ஆண்கள் திருமணம் செய்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

இவர்கள் சர்வதேச அளவிலான விற்பனைக்காக இணைய பாலியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

index12 முதல் 29 வயதுடைய பெண்களே இந்த அவலத்தை எதிர்கொள்கின்றனா எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சீனாவில் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், விற்கப்படுகின்றனர், அல்லது சீனாவில் கடத்தப்படுகின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த பெண்கள் வடகொரியாவிலிருந்து அழைத்தும் வரப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

இவர்கள் சீனாவின் வடகிழக்கில்  உள்ள விபச்சார விடுதிகளில் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒன்பது வயது சிறுமிகள் உட்பட பெண்கள் வெப்காம் போன்றவற்றின் முன்னாள் வெளிநாட்டவர்களிற்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

நான் வேறு ஆறு வடகொரிய பெண்களுடன் விபச்சாரத்திற்காக விற்கப்பட்டேன் என வடகொரிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.