கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில்  படுகாயமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி (22 வயது) எனும் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கிழக்கு பல்கலை கழகத்தில் கல்வி பயிலும் மாணவியாவார்.

இவரோடு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தகது.