ilakkiyainfo

சுமந்திரன்; பாதி உண்மையும் மாற்றீடுகளும்! -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் (கட்டுரை)

சுமந்திரன்; பாதி உண்மையும் மாற்றீடுகளும்! -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் (கட்டுரை)
May 22
08:17 2020

கடந்த வாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற தலைவரான எம்.ஏ.சுமந்திரன், சமுத்திதாவுடன் உண்மை என்ற சிங்கள நிகழ்ச்சி திட்டத்திற்குபேட்டியொன்றை வழங்கினார்.

சமுத்திதா சமரவிக்கிரம இக்கலந்துரையாடலை நிகழ்த்தினார். இந்த நேர்காணலில், சுமந்திரன் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்,

அவற்றில் சில அரைவாசி உண்மைகளாக இருக்கமுடியும். பிரபாகரனின் “அரசியல் அல்லது ஆயுத திட்டத்தை” தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், புலம்பெயர்ந்த புலி உறுப்பினர்களுடன் தனக்குத் எந்த தொடர்பும் இல்லை என்றும் சுமந்திரன் கூறியுள்ளார் .

பிரதான தமிழ் அரசியல் கட்சியின் உத்தியோகப்பற்றற்ற தலைவரான சுமந்திரன், புலிகளின் அரசியல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கவில்லை என்பது சுவாரஸ்யமானது.

தமிழ் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்தில் கூறுவதற்கு முற்றிலும் , மாறுபட்டதொன்றை கொழும்பில் கூறுவது அசாதாரணமானதல்ல.

பெரும்பாலும், வடக்கில் விடுக்கப்படும் அறிக்கைகள் தேசியவாத மற்றும் உணர்ச்சிகளை கிளறிவிடுபவையாக இருப்பினும், இந்த தடவை , சுமந்திரனின் கூற்றுக்கள் முற்றிலும் தமிழ் பொதுவோட்டத்திற்கு வெளியேஇருந்தன.

எனவே, கடந்த வாரம், சுமந்திரன் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்களிடமிருந்து பரவலான கண்டனங்களை எதிர்கொண்டார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சிலரும் உள்ளடங்கி இருந்தனர்.

அவரது உருவபொம்மை செருப்பு மாலைகளுடன் காணப்பட்டன. இது அதியுச்ச பட்ச அவமானமாக காட்டப்பட்ட,து. இந்த பின்னணியில் தான், பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் ஆற்றியிருந்த சுமந்திரனின் பொது உரைஒளி நாடா பதிவு பேஸ்புக்கில் சுற்றுகளைச் செய்யத் தொடங்கியது.

ஒரு வீடியோவில், கோபமடைந்த சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது செய்வது தவறு என்று நினைத்தால் மாற்று வழியை வழங்குமாறு தன்னை பழித்துகூறு வோருக்கு சவால் விடுத்தார்.

மாற்றுவழி என்ன என்று எமக்கு அவர் கூறுவது போன்று இது இருந்தது. இந்த நாட்களில் இது சுமந்திரனுக்கான பொதுவானதொரு கருப்பொருள். ஆதலால் அவருக்கு மாற்று வழிகளை வழங்க நான் முடிவு செய்தேன் .

ஆட்சியில் இருந்துவரும் எந்தவொரு அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவது மாற்றீடு அல்ல. மற்றொருமாற்றீடு என்னவென்றால், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கங்களுடன் பேரம் பேசுவதற்கு தைரியத்தை வளர்த்துக்கொள்வதாகும்.

ஒரு பதிலாளாக போல நடந்து கொள்வதை விட, எதிர்க்கட்சியில் இருக்கும்போது எதிர்க்கட்சியாக செயல்படுவதே சிலசமயம் மற்றொரு மாற்றீடாக அமையும்.

2015 ஒரு சவாலான ஆண்டாக இருந்தது. 2009 முதல் 2015 வரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகள் தமிழ் மக்களை இழப்பின் விளிம்பிற்கு தள்ளின.

அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர், 2015 ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பளித்தது.

எனவே, ஐக்கிய தேசிய தேசிய கட்சி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. , ஆனால் அந்த தருணத்தில் , தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் சிறிசேன மாற்றத்தை விரும்பினர். அதேசமயம் தமிழ்மக்கள் வாக்குகள் இல்லாமல் சிறிசேனவினால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

ஜனாதிபதியாக வருவதற்கு பதிலீடாக தமிழ் கூட்டமைப்பு எதனையும் வலியுறுத்தியிருக்கவில்லை. பேரம் பேசும் நம்பிக்கையையையும் அது கொண்டிருக்கவில்லை.

எனவே, 2015 தேர்தல் ஜனாதிபதி சிறிசேனாவிற்கு (சிறிசேனாவிற்கும் மட்டும்) கிடைத்த வெற்றியாக அமைந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது ஐ.தே .க . அரசாங்கம் வீழ்ந்து விடாமல் காப்பாற்றியது. அரசாங்கத்திற்கு எதிரான முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் 2018 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இரண்டாவதாகஉயிர்த்த ஞாயிறு (ஐ.எஸ்.ஐ.எஸ்) தாக்குதல் தொ டர்பாக கொண்டுவரப்பட்டது.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ. தே. க.அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

ஏப்ரல் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ. தே. க.விற்கு வாக்களித்தபோது, அது பிரதான உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அரசாங்கம் அதன் பதவிக் காலத்தை நீடிக்க உதவியதற்காக தமிழ் மக்களுக்கு தமிழ்கூட்டமைப்பு எதனை பெற்றுக்கொண்டது? நான் அறிந்தவரை , பதிலுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

பதிலுக்கு எதுவும் இல்லாமல் ஒரு எதிர்க்கட்சி ஒரு அரசாங்கத்தை ஆதரிப்பதை கற்பனை செய்வது கடினம்.

எந்தவொரு அரசியல் சலுகையும் இல்லாமல் சிக்கலான காலங்களில் ஐ. தே. கஅரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தமை தமிழ் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள் என்ற “வதந்தி” தமிழ் சமூகத்தின் மத்தியில் ஏற்பட இட்டுச்சென்றது.

2019 ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஒரு இன்பியல், துன்பியல் கலவை நாடகம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிற தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து, 13 அம்சத் திட்டத்தை அதன் ஆதரவுக்கு முன்நிபந்தனையாக முன்வைத்தது.

இந்த திட்டத்தை யார் ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு தமிழ் வாக்குகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் போன்ற கோரிக்கைகள் இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தமிழர்களின் யோசனை தொடர்பான அவரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அழுத்தத்தினால் அந்த யோசனைகளை சஜித் பிரேமதாஸவும் நிராகரித்திருந்தார்.

ஆயினும்கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஎந்தவொரு முன்நிபந்தனைகளும் இல்லாமல் பிரேமதாசவுக்கு அங்கீகாரம் அளித்தது.

குறிப்பாக ஒரு தேர்தல் ஆண்டில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கோரிக்கைகளை தென்னிலங்கை பிரதான கட்சிகள் நிராகரிக்கும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும், திட்டங்கள் நிராகரிக்கப்பட்டால், மற்றொரு திட்டம் குறித்து கட்சி சிந்தித்திருக்க வேண்டும்.

இந்த பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்துக் கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எனவே, ஐ. தே. கவேட்பாளர் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதாரணமாக சரணடைந்தது. பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவைத் தொடர்ந்து, 13 அம்ச முன்மொழிகள் எந்தவொரு வேட்பாளருக்கும் முன்வைக்கப்படவில்லைஎன்று சுமந்திரன்தெரிவித்திருந்தமை , அரை வாசி உண்மை.

ஒரு ஜனநாயகத்தில், அரசியல் கட்சிகள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது.

பிற சமூகங்களின் நல்வாழ்வையும் தேசிய நலனையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தாமல் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவுமான ஒரு பொறுப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளதுநிறைவேற்ற முடியாத இயலாமைகாரணமாக.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினர்களின் சுய நலன் சமூக நலனை மேவி மீறிச்செல்வதாக தெரிகிறது. 1970 களில் தமிழ் இளைஞர்களை போராட்டத்திற்குதள்ளியது தமிழர் விடுதலை கூட்டணியின் தோல்விதான் என்பதைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தென்னிலங்கை கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

(கொழும்பு டெலிகிராப்)

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com