சென்னை என்ஜினியர் ஃபேஸ்புக்கில் 11 பெண்களை எப்படி மடக்கி ஏமாற்றினார் தெரியுமா?
September 28
15:15 2016
ஸ்வாதி மாதிரி கொன்னுடுவேன்: ஃபேஸ்புக் தோழியை மிரட்டிய என்ஜினியர்
ஃபேஸ்புக் மூலம் சென்னையை சேர்ந்த என்ஜினியர் சாமுவேல் பெண்களை எப்படி மடக்கினார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வாதி போன்று கொலை செய்துவிடுவேன் என ஒரு பெண்ணை மிரட்டியும் உள்ளார்.
சென்னையை சேர்ந்த என்ஜினியர் சாமுவேல் ஃபேஸ்புக் மூலம் 11 பெண்களிடம் நெருங்கிப் பழகி அவர்களை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் , வீடியோ எடுத்து மிரட்டி போலீசில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, சென்னையில் உள்ள பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர் சாமுவேல்.
ஆனால் அவர் தன்னை சாம் என்றே குறிப்பிடுகிறார். ஃபேஸ்புக் பிரியரான அவருக்கு ஏகப்பட்ட தோழிகள் உள்ளனர். ஃபேஸ்புக் மூலம் பெண்களுடன் சாட்டிங் செய்து பழக்கமாகி பின்னர் நேரில் சந்தித்துள்ளார்.
நேரில் சந்தித்து நெருங்கிப் பழகி அதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை வைத்து பெண்களை மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார்.
அவரால் 11 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் தனது செல்போனில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் அவருடன் பழகிய பெண்கள் தங்களின் புகைப்படங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர் என்றனர். சாமுவேல் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
சாமுவேல் என்னை பின்தொடர்ந்து காதலிப்பதாக தெரிவித்தான். ஒரு மாதமாக என்னை தொந்தரவு செய்தான்.
நான் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினான்.
அவன் சொன்னது போல கையை அறுத்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டான்.
இதனால் அவனுடன் பழக ஆரம்பித்தேன். பல இடங்களுக்கு சென்றோம்.
அப்போது ஒரு நாள் என்னுடைய செல்போனில் பேசிய பெண் ஒருவர், சாமுவேலை நம்பாதே.
அவனால் ஏற்கனவே நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.
பிறகு ஒருநாள் சாமுவேலின் போனை எடுத்துப் பார்த்தேன். அதில் பல பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் இருந்தன.
இதன்பிறகு அவனிடமிருந்து விலகினேன். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் என்னை போனில் மிரட்டத் தொடங்கினான்.
10 லட்சம் ரூபாய் கேட்டான்.
பணத்தை தரவில்லை என்றால் சுவாதியைப் போல கொலை செய்துவிடுவதாக கூறினான்.
இதற்கிடையில் வாட்ஸ்அப் குரூப்பில் என் புகைப்படம் உள்பட பல பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டான்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment