ilakkiyainfo

செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்?!

செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்?!
January 27
07:27 2019

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா – பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகன் இருவருக்குமான திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.

டிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா – பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகன் இருவருக்குமான திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள், சௌந்தர்யா. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல் இந்தியத் திரைப்படமான `கோச்சடையான்’ படத்தை இயக்கியவர்.

சமீபத்தில் தனுஷ் நடித்த, `வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். ஏற்கெனவே திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் சௌந்தர்யா பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளரான விசாகன் என்பவரைக் காதலித்து வருவதாகச் செய்திகள் வந்தன.

விசாகனும் முதல் திருமண பந்தத்திலிருந்து விவாகரத்து பெற்றவர்தானாம். சௌந்தர்யா – விசாகன் திருமணச் செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Soundarya-collage_15529

செளந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யவிருக்கும் இந்த விசாகன் யார்?!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவைத் திருமணம் செய்துகொள்ள உள்ள விசாகனைப் பேட்டிக்காக அணுகினோம். ஆனால், அவர் பேசத் தயங்கினார். விசாகன் பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

`கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூர்தான் விசாகன் குடும்பத்தாரின் பூர்வீகம். இவரது பெரியப்பா பொன்முடி, தி.மு.க-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு பொன்முடி காலமானார். பொன்முடியின் தம்பி வணங்காமுடி. அண்ணன் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அதேநேரத்தில், இவர் தன் மருந்து கம்பெனி வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தினார்.

வெறும் 5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த மருந்து கம்பெனி, தற்போது வளர்ந்து இந்தியாவின் முன்னணி மருந்து கம்பெனிகளில் ஒன்றாக உள்ளது.

வணங்காமுடி, அவரது மகள் சுபாஷினி, மகன் விசாகன் ஆகிய மூவரும்தான் தற்போது இந்த மருந்து கம்பெனியைக் கவனித்துக்கொள்கின்றனர்.” என்கிறார், விசாகனின் நண்பர்களில் ஒருவர்.

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com