ilakkiyainfo

சொல்லாதவற்றையெல்லாம் சொன்னதாகச் சொல்லி சோரம் போனதாக சோடிக்கப்பட்ட சோகக்கதை

சொல்லாதவற்றையெல்லாம் சொன்னதாகச் சொல்லி சோரம் போனதாக சோடிக்கப்பட்ட சோகக்கதை
December 27
11:33 2014

ஸ்வேதா கைதானதுக்கு தீபிகாபடுகோனும் குஷ்புவும் எதிர்ப்புத் தெரிவித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். எந்த ஆதாரமுமில்லாமல் தவறான செய்திகளை வெளியிட்டு எனது வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டார்கள் என்று பத்திரிகைகள் மீது பாய்ந்திருக்கிறார் நடிகை ஸ்வேதா பாசு.

நான் சொல்­லா­ததைச் சொன்­ன­தாக எழு­தி­யி­ருக்­கி­றீர்கள். இதன் மூல­மாக எனது வாழ்க்­கையை நாச­மாக்கி விட்­டீர்கள் என்று பத்­தி­ரி­கைகள் மீது பாய்ந்து பிராண்டி இருக்­கிறார் நடிகை ஸ்வேதா பாசு.

சந்­தோஷம் சினிமா விருது வழங்கும் விழாவில் பங்­கேற்க ஐத­ரா­பாத்­துக்கு வந்­தி­ருந்தார் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். அப்­போது ஹோட்டல் அறையில் ஒரு தொழி­ல­தி­ப­ருடன் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட போது கைதா­ன­தாக செய்­திகள் வெளி­வந்­தன.

நடிகை கைது என்று வெளி­யான செய்­தி­களைத் தொடர்ந்து தீபி­கா­ப­டு­கோனே குஷ்பு உள்­ளிட்ட பல பிர­ப­லங்கள் ஸ்வேதா­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­தனர்.
2_189_417_swetha-basu-prasad-hot-11
இந்த நிலையில் ஐத­ரா­பாத்­தி­லுள்ள பிரஜ்­வாலா மீட்பு இல்­லத்தில் அவர் தங்க வைக்­கப்­பட்டார். ஸ்வேதாவின் மீது பொய் வழக்குப் போடப்­பட்­டி­ருக்­கி­றது என்று இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்­ப­ளித்­தி­ருக்­கி­றது ஹைத­ராபாத் நீதி­மன்றம்.

சுமார் 60 நாட்கள் கழித்து வெளி­யு­லகைக் கண்ட ஸ்வேதா மீடியா நண்­பர்­க­ளுக்­காக அறிக்கை ஒன்றை வெளி­யிட்டார். அதில் தான் மேற்­கண்ட வார்த்­தை­களைக் கொட்­டி­யி­ருந்தார். விப­சார வழக்கில் கைதான பிறகு இப்­போது தான் என்­னு­டைய கருத்தை முதல்­

மு­றை­யாக வெளி­யி­டு­கிறேன் என்று அவர் அழுத்திச் சொல்­லி­யி­ருப்­பது கவ­னிக்க வேண்­டி­யது.

மை, சந்­த­மாமா, ராரா உட்­பட சில தமிழ்ப் படங்­களில் நடித்து அறி­மு­க­மா­னவர் தான் ஸ்வேதா பாசு. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளி­யான மக்தீ என்ற முதல் படத்­தி­லேயே சிறந்த குழந்தை நட்­சத்­தி­ரத்­திற்­கான தேசிய விருது வென்­றவர்.

இக்பால் படத்தில் இவர் நடித்த போது சிறந்த துணை நடி­கைக்­கான விரு­துகள் குவிந்­தன. அதன் பிறகு டீன் ஏஜில் இருந்த ஸ்வேதாவின் பார்வை முழுக்க முழுக்க சினி­மாவை நோக்கித் திரும்­பி­யது.

தந்தை அனுஜ் மற்றும் தாய் சர்­மிஷ்­தா­வுக்கு இது சிறிதும் பிடிக்­க­வில்லை. ஆனால் குழந்தைச் சிரிப்பும் கொப்­ப­ளிக்கும் குறும்­பு­மாக இருந்த குண்­டுப்பெண் ஸ்வேதாவை நோக்கி பட வாய்ப்­புக்கள் தேடி வந்­தன.

முதல்ல படிப்பைக் கவனி என்ற பெற்­றோர்­களின் அதட்­டலை மீறி கோதா பங்­காரு லோகம் என்ற தெலுங்கு படத்தில் நாய­கி­யானார் ஸ்வேதா. விடலைப் பருவ காதலைச் சொன்ன இந்தப் படம் ஹிட்­டா­னது. வெற்­றிக்குப் பிறகு என்ன நடக்­கு­மென்­பது தெரியும் தானே.

கான்வென்ட் அழகி போன்ற ஸ்வேதாவின் தோற்றம் தெலுங்குத் தயா­ரிப்­பா­ளர்­களை வரி­சையில் நிற்க வைத்­தது. ஆனால் முதல் படம் தந்த வெற்றி அடுத்­த­டுத்த படங்­களில் மங்கிப் போனது.

டி.வி. நிகழ்ச்­சி­களில் பங்­கேற்கும் அள­வுக்கு அவ­ரது மார்க்கெட் இறங்­கி­யது. இந்த நேரத்­தில்தான் சினிமா விருது வழங்கும் விழா­வுக்குச் சென்ற போது சிக்­கலில் சிக்கிக் கொண்டார்.

யாரும் எந்தப் புகாரும் சொல்­லாமல் திடீ­ரென்று ரெய்டு நடத்த முடி­யாது. ஸ்வேதா தங்­கி­யி­ருந்த ஹோட்டல் சினிமா விருது நிகழ்ச்­சியின் ஸ்பொன்ஸர் குழுவில் ஒன்று. அவ­ருக்­கான தங்கும் செல­வையும் நிகழ்ச்சிக் குழு­வி­னரே ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்கள்.

இந்த நிலையில் பணத்­திற்கு வழி­யில்­லாமல் அவர் விப­சா­ரத்தில் ஈடு­பட்டார் என்று செய்­திகள் வெளி­வந்­ததை என்ன சொல்­வது என்­கி­றது ஸ்வேதா தரப்பு.

என்­னிடம் பணம் இல்லை. குடும்­பத்தைக் காப்­பாற்­றவும் வேறு சில விஷ­யங்­க­ளுக்­கா­கவும் பணம் தேவைப்­பட்­டது. எல்லாக் கத­வு­களும் மூடப்­பட்ட நிலையில் விப­சா­ரத்தில் இறங்­கினால் நிறைய பணம் கிடைக்கும் என சிலர் வழி­காட்­டினர்.

நான் ஒருத்தி மட்­டு­மல்ல என்னைப் போல பல நடி­கைகள் விப­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ளனர் என்று செய்­திகள் வெளி­வந்­தன. 1980 களில் வெளி­வந்த சினிமா டய­லாக்கை விட மோச­மான இந்த வார்த்­தைகள் என்­னு­டை­ய­தல்ல என்­பதை எனது பெற்­றோரும் நண்­பர்­களும் புரிந்து கொண்­டனர் என்­கிறார் ஸ்வேதா.

எப்­படி நடந்­தது? என்ன நடந்­தது? என்று

தெரி­யாமல் ஸ்வேதா­வுக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் வலைத்­த­ளங்­க­ளிலும் மீடி­யா­விலும் கருத்­துக்கள் தெறித்­தன. சினி­மா­வு­லகைச் சேர்ந்த சிலர் ஸ்வேதா­விற்கு பட வாய்ப்­புக்கள் தரு­வ­தாக அறி­வித்­தனர்.

இதனைப் பற்றி எதுவும் தெரி­யாமல் நான் அந்த இல்­லத்தில் குழந்­தை­க­ளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் புத்­தகம் படித்துக் கொண்டும் இருந்தேன் என்று இப்­போது சொல்­லி­யி­ருக்­கிறார் ஸ்வேதா.

நான் யாருக்கும் பேட்டி தர­வில்லை. ஐத­ராபாத் பொலிஸும் யாருக்கும் அனுமதி தரவில்லை என்றிருக்கிறார்கள். டி.வி. பார்க்கவோ செய்தித்தாள் படிக்கவோ நான் அனுமதிக்கப்படவில்லை.

என்­னு­டைய அம்­மா­வுக்குச் சில­முறை மட்டும் போன் பேசி­யி­ருக்­கிறேன். அப்­ப­டி­யி­ருக்கும் போது என்­னு­டைய கருத்­தாக இதனைச் சொன்­னது யார் என்று கேட்­டி­ருக்­கிறார்.

தற்­போது நஸ்­ருதீன் ஷாவுடன் ஸ்வேதா சேர்ந்து நடித்த கேப் நைட் என்ற குறும்­படம் உலகத் திரைப்­பட விழாக்­களில் கவ­னிக்­கப்­பட்டு வரு­கி­றது.

தற்­போது சினிமா தயா­ரிப்­பிலும் ஆர்வம் காட்டும் ஸ்வேதா எந்த ஆதா­ர­மு­மில்­லாமல் செய்­தி­களை வெளி­யிட்டு எனது வாழ்க்­கையை நாசப்­ப­டுத்தி விட்­டீர்கள் என்று மீடி­யாக்கள் மீது பாய்ந்­தி­ருக்­கிறார்.

இந்த வழக்கில் இருந்து விடு­பட்ட பிறகு நடிப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் ஸ்வே தாவைத் தேடி வந்­தி­ருக்­கி­றது. இந்த நிலை யில் ஹிந்தி இயக்­குநர் அனுராக் காஷ்­ யப்பின் பேன்டம் புரொடக் ஷன்ஸ் நிறுவ னத்தில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட் ஆகச் சேர்ந் திருக்கிறார் ஸ்வேதா பாசு.

அதேபோல வேண் டுமென்றே செய்த சிலரது சதி கார ணமாக நான் சிக்கிக்கொண்டேன் என்று கூறினார் ஸ்வேதா பாசு. அந்த சதிகாரர்கள் யார் என்று சொல்லவில்லை.

யார் அந்த சிலர்? என்ன சதி? என்று மீடி யாக்கள் மீண்டும் களம் இறங்கப் போகின்றன பாவம் ஸ்ஸ்ஸ்ஸ்…. ஸ்வேதா பாசு!

தகவல்கள்: ஷண்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com