ilakkiyainfo

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்)

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!- (படங்கள்)
April 14
23:46 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.

பணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி அவர்கள் தனது உத்தியோகபூர்வ வளாகத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார். அதனைத்தொடர்ந்து கை விசேட பாரம்பரியத்திலும் இணைந்து கொண்டார்.

மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டில்  ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி, உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார்.

மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஜனாதிபதியின்   எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித் திட்டம்   நாளைய (150 தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்து சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.

இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி  அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.(ஜனாதிபதி ஊடகப் பிரிவு இணையத்தளம்)

Maithri-2

Maithri-1

Maithri_4

Maithri-3

Maithri

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com