ilakkiyainfo

ஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்!! – சுபத்திரா (கட்டுரை)

ஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்!! – சுபத்திரா (கட்டுரை)
June 12
23:00 2019

தாம் பாது­காப்பு செய­ல­ராக இருந்­த ­போதும், பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை இல­கு­வாகச் சந்­திக்க முடி­வ­தில்லை என்றும், சில­வே­ளை­களில் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்துப் பெறு­வ­தற்­காக 3 மணி நேரம் கூட காத்­தி­ருந்­தி­ருக்­கிறேன் என்றும் ஹேம­சிறி பெர்­னாண்டோ கூறி­யி­ருக்­கிறார்

21/4 தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரிக்கும், பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் அளிக்­கப்­படும் சாட்­சி­யங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கழுத்தை நெரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை, அளிக்­கப்­பட்­டுள்ள நான்கு சாட்­சி­யங்­க­ளுமே, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இய­லா­மையை, பொறுப்­பின்­மையை அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

முதலில் தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் அளித்த சாட்­சி­யமும், அதற்குப் பின்னர், பயங்­க­ர­வாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் நாலக சில்வா அளித்த சாட்­சி­யமும், அதை­ய­டுத்து, கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவும், முன்னாள் பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் அளித்­துள்ள சாட்­சி­யங்­களும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன பாது­காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்­சுக்­களை கையா­ளு­வ­தற்­கு­ரிய, ஆற்­றலைக் கொண்­டி­ருக்­கி­றாரா என்ற கேள்­வியை எழுப்ப வைத்­தி­ருக்­கின்­றன.

இந்த தெரி­வுக்­குழு விசா­ர­ணையில் இரண்டு விட­யங்கள் அம்­ப­ல­மா­கி­யி­ருக்­கின்­றன.

முத­லா­வது, தாக்­கு­தல்கள் தொடர்­பான போதிய முன்­னெச்­ச­ரிக்­கைகள் கிடைத்­தி­ருக்­கின்­றன. ஆனால், அதனைத் தடுப்­ப­தற்­கான சரி­யான பொறி­முறை கையா­ளப்­ப­ட­வில்லை என்­பது.

இந்த விட­யத்தில், புல­னாய்வு அமைப்­பு­களின் அதி­கா­ரிகள், பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரிகள், தொடக்கம், ஜனா­தி­பதி வரை தவ­றி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.

இரண்­டா­வது விடயம். பாது­காப்பு விட­யங்­களைக் கையா­ளு­வதில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.

அதற்­கு­ரிய ஆளு­மையை அவர் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது. “விடு­தலைப் புலி­களை அழித்­ததில் எனக்கு முக்­கிய பங்கு இருக்­கி­றது, மஹிந்த ராஜ பக் ஷ வெளி­நாடு சென்­றி­ருந்­த­ போது, ஒன்­பது முறை பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்து, போரை வழி­ ந­டத்­தினேன்.

போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­படும் போது கூட, புலி­களின் விமானத் தாக்­கு­த­லுக்குப் பயந்து மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ எல்­லோரும் வெளி­நாட்­டுக்கு ஓடி விட்­டார்கள்,

நானே பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்து, புலி­களை அழிக்கும் நட­வ­டிக்­கைக்கு தலைமை தாங்­கினேன்,” என்­றெல்லாம், முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்­தமை உங்­களில் பல­ருக்கு நினைவில் இருக்கக் கூடும்.

Samakaml-p1Page1Image0006-1b58f8c916385832d311e48281c052b9006eb667

பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக ஒன்­பது முறை பதவி வகித்தும் கூட, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பாது­காப்பு அமைச்­சையும், சட்டம் ஒழுங்கு அமைச்­சையும் சரி­யாக நிர்­வ­கிக்க முடி­ய­வில்லை அல்­லது தெரி­ய­வில்லை என்­ப­தையே தெரி­வுக்­கு­ழுவில் இது­வரை அளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

இது­வரை சாட்­சி­ய­ம­ளித்த நான்கு அதி­கா­ரி­க­ளுமே, கிட்­டத்­தட்ட எல்லா விட­யங்­க­ளிலும், ஒரே மாதி­ரி­யான கருத்­தையே கூறி­யி­ருக்­கி­றார்கள். முரண்­பட்ட தக­வல்­களை வெளி­யி­ட­வில்லை. இதி­லி­ருந்து, அவர்கள் உண்­மையை மறைக்க முனை­ய­வில்லை என்று தெரி­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, ஒக்­டோபர் 26 ஆட்­சிக்­க­விழ்ப்­புடன் தான், பிரச்­சி­னையே ஆரம்­ப­மா­னது. அப்­போது தான் அவர், பாது­காப்பு அமைச்­சுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்­வ­சப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி மற்றும் கோத்­தா­பய ராஜபக் ஷவை படு­கொலை செய்யும் சூழ்ச்சி தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை சரி­யாக விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று கூறியே, அதனை தன்­வ­சப்­ப­டுத்­தினார்.

download-14-1

அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர

அத்­துடன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­வுடன் முரண்­பட்டுக் கொண்டு, அவரை ஓரங்­கட்­டினார். இதற்குப் பின்­னரே, தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்­க­ளுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்தர அழைக்­கப்­ப­ட­வில்லை.

அவரை அழைக்கக் கூடாது என்று ஜனா­தி­பதி தமக்கு கட்­ட­ளை­யிட்­டி­ருந்தார் என, அப்­போ­தைய பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே, சாட்­சி­ய­ம­ளித்த தேசிய புல­னாய்வுப் பணி­யக தலைவர் சிசிர மென்­டிஸும், பொலிஸ்மா அதிபர் இன்­றியே தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டன என்று கூறி­யி­ருந்தார்.

ஆக, பொலிஸ் மா அதிபர், பாது­காப்புச் சபைக் கூட்­டங்­களில் பங்­கேற்க அழைக்­கப்­ப­டாமல் தடுக்­கப்­பட்டார் என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. அது ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவின் பேரி­லேயே நடந்­தி­ருக்­கி­றது.

அடுத்து, தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்கள் ஒழுங்­காக நடத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதும் இப்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. சிசிர மென்­டிஸின் சாட்­சி­யத்­திலும் அது­பற்றிக் கூறப்­பட்­டி­ருந்­தது. பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் அதனை உறுதி செய்­தி­ருக்­கிறார். தாம் பாது­காப்புச் செய­ல­ராக இருந்­த­போது,

2018 நவம்­ப­ருக்கும், 2019 ஏப்ரல் 19 இற்கும் இடையில், நான்கு முறை மாத்­தி­ரமே பாது­காப்புச் சபைக் கூட்டம் நடத்­தப்­பட்­டது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

Sisira-Mendis

Sisira-Mendis

சிசிர மென்­டிஸின் சாட்­சி­யத்­துக்குப் பின்னர், ஜனா­தி­பதி செய­லகம் வெளி­யிட்ட அறிக்­கையும் அதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

தேசிய பாது­காப்புச் சபைக்குப் பதி­லாக, தனி­யான பாது­காப்பு அதி­கா­ரி­களின் கூட்டம் வாரத்தில் இரண்டு முறை நடத்­தப்­பட்­டது என்றும், எப்­ப­டியும் ஜனா­தி­பதி வாரம் ஒரு­முறை அந்தக் கூட்­டத்தில் பங்­கேற்றார் என்றும் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

பாது­காப்புச் சபைக் கூட்­டத்தில் பேசப்­பட்ட விட­யங்கள் ஊட­கங்­க­ளுக்கு கசிந்­ததால் தான், அதற்குப் புறம்­பாக, தனி­யான பாது­காப்பு அதி­கா­ரி­களின் கூட்­டங்கள் நடத்­தப்­பட்­டன என்றும், அந்த அறிக்கை நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

முன்­ன­தாக, பாது­காப்புச் சபையின் இர­க­சி­யங்­களை கசிய விட்­டதால் தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்த்­த­ன­வையும், பாது­காப்புச் சபைக் கூட்­டங்­க­ளுக்கு அழைக்­க­வில்லை என்று, தயா­சிறி ஜய­சே­கர கூறி­யி­ருந்தார். அதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி செய­லக அறிக்­கையும் அமைந்­தி­ருந்­தது,

பிர­தமர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகி­யோரை பாது­காப்பு சபைக் கூட்­டத்­துக்கு அழைக்கக் கூடாது என்று ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார் என்று பாது­காப்புச் செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருக்­கிறார்.

அவர்கள் மூவ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­ப­டாத போதும் கூட, பாது­காப்புச் சபை வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­மு­றையோ கூடத் தவ­றி­யது ஏன்?

பிர­த­மரும், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும் தான் தக­வல்­களை கசிய விடு­கின்­றனர் என்றால், அவர்­க­ளுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என்ற உத்­த­ரவு இருந்தும், பாது­காப்புச் சபைக்கு அப்பால் தனி­யான பாது­காப்புக் குழு­வொன்றை அமைக்க வேண்­டிய தேவை எழுந்­தது ஏன்?

இவை­யி­ரண்டும் இப்­போது முக்­கி­ய­மாக எழுந்­தி­ருக்­கின்­றன கேள்­விகள். இதற்கு ஜனா­தி­ப­தியே பதி­ல­ளிக்க வேண்டும்.

பாது­காப்புச் சபைக் கூட்­டங்­களில், குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யான சஹ்ரான் ஹாசிம் தொடர்­பாக விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் குறித்தும் விவா­திக்­கப்­பட்­டுள்­ளன. ஆனாலும், அவற்­றுக்கு ஜனா­தி­பதி முக்­கி­யத்­துவம் அளிக்­க­வில்லை என்றே தெரி­கி­றது.

அண்­மைய பாது­காப்புச் சபைக் கூட்­டங்­களில், சட்­ட­வி­ரோத முறை­யி­லான மீன்­பிடி குறித்தும், மாகந்­துர மதூஷ் குறித்­துமே அதிகம் விவா­திப்­பதில் ஜனா­தி­பதி ஆர்வம் கொண்­டி­ருந்தார் என்று, ஹேம­சிறி பெர்­னாண்­டோவின் சாட்­சி­யத்தில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

அதா­வது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கவனம் முழு­வதும், தன்­னையும், கோத்­தா­பய ராஜபக் ஷவையும் படு­கொலை செய்யும் சதித்­திட்டம் தொடர்­பான விசா­ர­ணையின் மீதே இருந்­தது. அதி­லுள்ள அர­சியல் தொடர்­பு­களின் மீதே கவனம் செலுத்­தி­யி­ருக்­கிறார்.

அண்­மையில் சரத் பொன்­சேகா ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த ஒரு செவ்­வியில், “ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாமல் குமா­ரவைத் தவிர, வேறெ­வ­ரையும் நம்பத் தயா­ராக இல்லை” என்று கூறி­யி­ருந்தார். அது முற்­றிலும் சரி­யான கருத்தே.

நாமல் குமார தான், ஜனா­தி­பதி, மற்றும் கோத்­தா­பய ராஜபக் ஷ படு­கொலைச் சதித்­திட்டம் தொடர்­பான தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தி­யவர். அந்த விசா­ர­ணை­களால் தான், ரிஐ­டியின் பணிப்­பாளர் நாலக சில்வா கைது செய்­யப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் இருக்க வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டது.

சஹ்­ரானை கைது செய்­வ­தற்கு, தாம் பகி­ரங்க பிடி­யாணை பெற்­றி­ருந்­த­தா­கவும், தாம் கைது செய்­யப்­பட்ட பின்னர், அந்த பிடி­யாணை செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும், நாலக சில்வா சாட்­சியம் அளித்­தி­ருக்­கிறார்.

ஆக, ஒக்­டோபர் 26 ஆட்­சிக்­க­விழ்ப்பு தான், ஒன்றன் பின் ஒன்­றான பாது­காப்பு தவ­றுகள், குழப்­பங்­க­ளுக்கு கார­ண­மா­கி­யி­ருக்­கி­றது. அதற்குப் பின்னர், பாது­காப்பு அமைச்­சுடன், சட்டம் ஒழுங்கு அமைச்­சையும் தனது தலையின் மீது சுமக்க ஆசைப்­பட்ட ஜனா­தி­பதி, அந்த வேலை­யையும் உருப்­ப­டி­யாகச் செய்யத் தவறி விட்டார்.

ஒரு­வேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஐ.தே.கவிடம் இருந்­தி­ருந்தால், பூஜித ஜய­சுந்­தர, ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகி­யோ­ருடன், அந்த அமைச்சை வைத்­தி­ருந்­த­வரின் தலையும் உருட்­டப்­பட்­டி­ருக்கும்.

hemasiri-fernando-_850x460_acf_cropped

hemasiri-fernando-

தாம் பாது­காப்பு செய­ல­ராக இருந்­த­போதும், பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை இல­கு­வாகச் சந்­திக்க முடி­வ­தில்லை என்றும், சில­வே­ளை­களில் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்துப் பெறு­வ­தற்­காக 3 மணி நேரம் கூட காத்­தி­ருந்­தி­ருக்­கிறேன் என்றும் ஹேம­சிறி பெர்­னாண்டோ கூறி­யி­ருக்­கிறார்.

கோத்­தா­பய ராஜபக் ஷ பாது­காப்பு அமைச்சின் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்தார் என்றும், ஆனால், தனக்கு அந்த அதி­காரம் இல்­லா­ததால், எதுவும் செய்ய முடி­ய­வில்லை என்றும் அவர் ஆதங்­கத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அதை­விட, புல­னாய்வுத் தக­வல்கள் அரச புல­னாய்வுப் பணிப்­பாளர் நிலந்த ஜெய­வர்த்­தன மூலமே ஜனா­தி­பதி பெற்றுக் கொண்டு வந்­தி­ருக்­கிறார் என்­பதும், இந்த சாட்­சி­யங்­களில் இருந்து தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது,

ஜனா­தி­ப­திக்கு புல­னாய்வுத் தக­வல்­களை அளிக்கும் அதி­காரம், தனக்கு இருக்­க­வில்லை என்று தேசிய புல­னாய்வுப் பணிப்­பாளர் சிசிர மென்­டிஸிம் கூறி­யி­ருந்தார்.

இந்த விட­யத்தில் பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பில் உள்ள, அரச புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் நிலந்த ஜய­வீ­ரவும், குற்றப் புல­னாய்வுப் பணி­யக தலை­வரும், தெரி­வுக்­குழு முன்­பாக சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ர­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த சாட்­சி­யங்கள் மற்றும் குறுக்கு விசா­ர­ணையில் அம்­ப­ல­மான தக­வல்கள், எல்­லாமே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆளு­மையை கேள்­விக்­குள்­ளாக்­கி­யுள்­ளன

குறிப்­பாக, பாது­காப்பு அமைச்சைக் கையா­ளு­வ­தற்குத் தேவை­யான திறன் அவ­ருக்கு இருக்­கி­றதா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது,

அண்­மையில் புது­டெல்­லியில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய ஜனா­தி­பதி, தமக்கு புல­னாய்வு அறிக்­கைகள் முன்­கூட்­டியே கிடைக்­க­வில்லை என்றும், கிடைத்­தி­ருந்தால் வெளி­நாடு சென்­றி­ருக்­க­மாட்டேன் என்றும் கூறி­யி­ருந்தார்.

அவர் வெளி­நாடு செல்­வ­தற்கு முன்னர், பாது­காப்புச் செய­லரோ, பொலிஸ் மா அதி­பரோ, தேசிய புல­னாய்வு பணி­யக தலை­வரோ, தாக்­குதல் தொடர்­பான புல­னாய்வுத் தக­வலை கூற­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. அதனை அவர்கள் மூவரும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

ஆனால் வழக்­க­மாக, அவ­ருக்கு புல­னாய்வு தக­வல்­களை வழங்கும், அரச புல­னாய்வு சேவை பணிப்­பாளர் நிலந்த ஜெய­வீர அந்த முன்­னெச்­ச­ரிக்­கையை கொடுத்­தாரா என்­பது, அவர் தெரி­வுக்­குழு முன்­பாக உண்­மையைக் கூற முன்­வந்தால் மாத்­தி­ரமே, வெளிச்­சத்­துக்கு வரும்.

அது­வரை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்தச் சம்­ப­வங்­க­ளுக்­கான நேர­டி­யாக பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் இருந்து தப்­பிக்­கலாம்.

எவ்­வா­றா­யினும், தான் நாட்டில் இல்லாததால், இதற்குப் பொறுப்பேற்க முடியாது என்றும், இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறும், அதற்காக வெளிநாட்டுத் தூதுவர் பதவியை தருவதாகவும் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக பூஜித ஜயசுந்தர கூறியிருக்கிறார். இதனை ஹேமசிறி பெர்னாண்டோவின் சாட்சியமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற நிலையில் செயற்பட்டாரா, பேரம் பேசுகின்ற ஒரு வணிகரைப் போல செயற்பட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவற்றுக்கு அப்பால், இந்த தாக்குதல்களுக்கான பொறுப்பை யாராவது ஒருவரின் தலையில் கட்டி, இந்த விவகாரத்தை மூடிமறைத்து விட அவர் எத்தனித்திருக்கிறார் போலவே தென்படுகிறது.

தெரிவுக்குழு விசாரணைகளில் அம்பலமாகும் இரகசியங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எழுப்பப்படும் கூச்சல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு விடயத்தில் இருந்து வந்த அலட்சியம் மற்றும் ஓட்டைகளை இந்த விசாரணைகள், நாட்டு மக்கள் உணரும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

இந்த விசாரணைகளின் முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறியப்படாத பல பக்கங்களை வெளிப்படுத்துவதாகவும், அவரது இயலாமையை அம்பலப்படுத்துவதாகவும் மாத்திரம் இருக்கப் போவதில்லை. அதற்கும் அப்பால், மீண்டும் ஒரு அரசியல் பூகம்பத்துக்கும் இது வழிவகுக்கக் கூடும்.

– சுபத்திரா-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com