ilakkiyainfo

ஜப்பானுக்கு மேலாக பறந்த வடகொரியாவின் ஏவுகணை!!: அதிர்சியில் ஜப்பானியர்கள்!!

ஜப்பானுக்கு மேலாக  பறந்த வடகொரியாவின் ஏவுகணை!!: அதிர்சியில் ஜப்பானியர்கள்!!
August 29
19:30 2017

வடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் வானில் பறந்ததால், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை களை வீசி பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பொருளாதார தடையும் விதித்தன. அதை கண்டு கொள்ளாத வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

சமீபத்தில் அமெரிக்காவின் குயாம் தீவை தாக்கும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்க தென் கொரியாவுடன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் கூட்டாக போர் பயிற்சி மேற்கொண்டது. இது வட கொரியாவை ஆத்திரத்தின் உச்சியில் ஏற்றியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பகத்தில் போர் பதட்ட சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், வடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் பறந்தது. ஜப்பானில் வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது.

ஏவுகணை ஜப்பானின் வான் பகுதியில் சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ”தங்கள் நாட்டின் வானிலை ஏவுகணையை பறக்கவிடுவது பொறுப்பற்ற செயல் என்று அபே தெரிவித்தார். இந்த ஏதேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசக் கூட்டத்திற்கு பிறகு அபே இந்த கருத்தை தெரிவித்தார்.

ஜப்பான் கடல் பகுதியில் இருந்து 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது.

விழுவதற்கு முன்பாக ஏவுகணை மூன்று பாகங்களாக வெடித்து சிதறியது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் குயாம் தீவை எளிதில் சென்று தாக்கும் திறன் படைத்தது என்று கூறப்படுகிறது.

முன்னதாக குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கும் மூன்று ஏவுகணைகளை சமீபத்தில் வடகொரியா சோதனை செய்திருந்த நிலையில், தற்போது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
43A8E0D300000578-4831230-image-m-27_1503961323438

செவ்வாய்க்கிழமை அதிகாலையில், வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த பல பாதுகாப்பு வல்லுநர்கள், இது வரை ஜப்பான் பிராந்தியம் மீது வடகொரியா ஏவியுள்ள ராக்கெட்கள் செயற்கைகோள்களை தாங்கிச் சென்றதாக அந்நாடு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், இம்முறை வடக்கு ஜப்பான் மீது பறந்து சென்ற வட கொரிய ஏவுகணை ஒரு வெளிப்படையான தாக்குலுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

”இது மிகவும் தைரியமான நடவடிக்கை. மேலும், வட கொரியாவின் இந்த முயற்சி மிகவும் ஆத்திரமூட்டும் செயல். சர்வதேச சட்டத்தின்கீழ் தடை விதிக்கப்பட்ட செயலை வட கொரியா செய்துள்ளது” என்று ஹார்வார்ட் கென்னடி கல்வி நிலையத்தில் உள்ள கொரியா விவகாரம் தொடர்பான குழுவை சேர்ந்த டாக்டர். ஜான் பார்க் பிபிசியிடம் தெரிவித்தார்.

கிழக்கு ஆசியாவில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரும், வட கொரியாவுடனான முன்னாள் அமெரிக்க பேச்சாளருமான கிறிஸ்டபர் ஆர் ஹில், வட கொரியாவின் இன்றைய ஏவுகணை முயற்சியை இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளில் இது மிகவும் தீவிரமான ஒன்று என்று தனது டிவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
201708291000303101_1_Missile2._L_styvpf

முன்னதாக, தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ”முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து” என்று வர்ணித்துள்ளார்.

அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று, தனது கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து மூன்று குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஜப்பானுக்கு அப்பால் இந்த அண்மைய ஏவுகணை பறந்ததால் அப்பகுதி முழுவதும் எச்சரிக்கைகளை உண்டாக்கிய போதிலும், ஜப்பானின் பிரதான ஒலிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, இந்த ஏவுகணை முயற்சியால் எந்த சேதமும் இருந்ததற்கான அறிகுறியும் இல்லையென தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை ”மூர்க்கத்தனமான செயல்” என்றும், தங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவும் ஒரு தீவிரமான மற்றும் மோசமான ஆபத்து என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேலும் கூறியுள்ளார்.

தனது அரசு மக்களின் உயிர்களை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA August 30, 01:32

    உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000 மக்களை அநியாயமாக அணு குண்டு வீசி படு கொலை செய்தது அமெரிக்கா என்று, அப்படி பட்ட கொடியவனுக்கு சூத்து கொடுப்பதே நோர்த் கொரியாவை ஆத்திரமூட்டி உள்ளது, 1970 களிலேயே இலங்கையில் ஆட்சி மாற்றத்தை உட்படுத்த முயன்ற நாடு நோர்த் கொரியா, இப்போது அமெரிக்காவுடன் பாது காப்பு ஒப்பந்தம் உள்ள ஆசிய நாடுகள் எல்லாம் என்ன வாக போகின்றன என்பது எதிர்காலத்துக்காக கேள்வி ??? நோர்த் கொரியா தலைவரின் வீரம் பாராட்ட பட வேண்டியது, அத்துடன் விவேகமும் கூட , சாத்தன் அமெரிக்கா நேரடியாக மோதாமல் பின்னால் குத்த பார்க்கும், கவனம் வேண்டும். எப்படி மஹிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்த சாத்தானை அழித்ததால் இலங்கை இன்று அமைதி பூங்காவாக இருக்கின்றது அதே போல் உலக மகா சாத்தானை ஒடுக்கினால் உலகமும் அமைதியாக இருக்கும்.

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com