துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால்கசோஜியின் உடல்பாகங்களை கொலைகாரர்கள்  கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன

பத்திரிகையாளரை கொலைசெய்த பின்னர் சவுதிஅரேபியாவை சேர்ந்த கொலைக்கும்பலை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளரின் உடல் பாகங்களை கொண்டு செல்வதை காண்பிக்கும் வீடியோவை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன

பத்திரிகையாளர் கொல்லப்பட்ட தினத்தன்று  கொலையில் ஈடுபட்ட  கும்பலை சேர்ந்த துருக்கிக்கான சவுதி அரேபிய தூதுவரின் உத்தியோகபூர்வ  இல்லத்திற்கு செல்வதை வீடியோக காண்பித்துள்ளது

அந்த குழுவில் உள்ளவரின் கையில் பைகள் காணப்படுகின்றன,இவற்றிற்குள் பத்திரிகையாளரின் உடற்பாகங்கள் இருந்திருக்கலாம் என துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

துருக்கியின் புலனாய்வு பிரிவினருக்கு நெருக்கமான ஊடகமொன்றே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது

கொலைகாரர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் காணப்பட்ட குறிப்பிட்ட பைகள் தூதுவரின் வீட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை, என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தூதுவரின் இல்லத்தில் சோதனைகள் இடம்பெற்றன ஆனால் அவற்றை முழுமையாக சோதனையிடுவதற்கு  சவுதி அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த வீடியோ விசாரணையில் திருப்பு முனை எனவும் குறிப்பிட்டுள்ளனர்