ilakkiyainfo

ஜெனி­வாவில் வரு­கி­றது புதிய நீடிப்பு பிரே­ரணை: இலங்கை எதிர்த்தால் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்

ஜெனி­வாவில் வரு­கி­றது புதிய நீடிப்பு பிரே­ரணை: இலங்கை எதிர்த்தால் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்
February 02
20:47 2019

எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 25ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் மற்­று­மொரு புதிய பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

கனடா, ஜேர்மன், பிரிட்டன் மெச­டோ­னியா மற்றும் மொன்­ட­னேக்ரோ ஆகிய ஐந்து நாடு­களே இம்­முறை இலங்கை குறித்த பிரே­ர­ணையை கொண்­வ­ர­வுள்­ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன் கொண்­டு­வ­ர­ப­பட்டு நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆண்டு நீடிப்பு செய்­யப்­பட்ட அதே பிரே­ர­ணையே இம்­மு­றையும் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது. அதா­வது இலங்கை மீதான மேற்­பார்­வையை மீண்டும் நீடிக்கும் வகையில் இந்த பிரே­ரணை தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

இம்­முறை 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக நான்கு அறிக்­கைகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. அதில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நாய­கத்தின் இலங்கை குறித்த அறிக்கை முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகும்.

அதா­வது கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு மீண்டும் 2017 ஆண்டு புதுப்­பிக்­கப்­பட்ட பிரே­ர­ணையை எவ்­வாறு இலங்கை அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பா­கவே ஐக்­கிய நாடுகள் ஆணை­யாளர் நாய­கத்தின் அறிக்கை அமை­ய­வுள்­ளது.

அந்த அறிக்கை மீதான விவாதம் எதிர்­வரும் 20 ஆம் திகதி ஜெனிவா அமர்வில் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் இலங்­கையின் சார்பில் வெ ளிவி்­வ­கார அமைச்சர் பங்­கேற்று இலங்கை ஏற்­ப­டுத்­தி­யுள்ள முன்­னேற்­றங்கள் குறித்து விளக்­க­ம­ளிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­பு­கின்­றது.

அதே­போன்று இம்­முறை மேலும் மூன்று அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இலங்­கையின் சார்­பிலும் விபர அறிக்கை ஒன்று சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­கின்­றது. அத்­துடன் இலங்­கைக்கு விஜயம் செய்த இரண்டு ஐக்­கிய நாடுகள் விசேட நிபு­ணர்­களின் அறிக்­கை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பயங்­க­ர­வா­தத்தை எதிர்க்­கும்­போது மனித உரி­மை­களை பாது­காத்தல் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபு­ணரின் அறிக்கை தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்­டது.

அதே­போன்று கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் செய்த வெ ளிநாட்டுக் கடன்கள் மற்றும் பொரு­ளா­தார சமூக கலா­சார உரி­மைகள் குறித்த விசேட நிபு­ணரின் அறிக்­கையும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது

“இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கை­யி­லி­ருந்து பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொள்­ள­வி­ருக்­கின்­றனர். அர­சாங்கத் தரப்பில் அமைச்சு மட்டத் தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­வார்கள். பெரும்­பாலும் வெ ளிவி­வ­கார அமைச்சர் தலை­மை­யி­லான குழு பங்­கேற்கும்

பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பிலும் பிர­தி­நி­திகள் பங்­கேற்­பார்கள். அவர்கள் தமக்­கான நீதி தொடர்பில் ஜெனிவா வளா­கத்தில் நடை­பெறும் கூட்­டங்­களில் பங்­கேற்று உரை­யாற்­ற­வுள்­ளனர்.

தென்­னி­லங்­கை­யி­லி­ருந்தும் பல்­வேறு அமைப்­புக்கள் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளன. மேலும் மூன்று அறிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள மற்­று­மொரு பிரேரணை குறித்த விவாதம் 21 ஆம் திகதி இடம்பெறும். அதாவது பிரேரணையை நிறைவேற்ற முற்படும்போது இந்த விவாதம் நடைபெறும். இதற்கு இலங்கை அனுசரணை வழங்கினால் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை இணை அனுசரணை வழங்க மறுக்கும்பட்சத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

(ரொபட் அன்­டனி)

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com