ilakkiyainfo

ஜெயலலிதா இல்லாமல் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம்: என்ன நடந்தது?

ஜெயலலிதா இல்லாமல் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம்: என்ன நடந்தது?
October 20
03:57 2016

காலை 9:30 மணிக்கு தலைமைச் செயலக அமைச்சரவைக் கூட்ட அரங்கில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் துவங்கியது.

இதில், தலைமைசெயலர் ராம மோகன ராவ், நிதித் துறை செயலர் சண்முகம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.

காலை, 10:35 மணிக்கு கூட்டம் முடிந்தது.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாவது, சமீபத்தில், அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே விற்பனையான, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரைமுறை செய்வது. இனிமேல், அங்கீகாரம் பெற்ற மனைகளை மட்டும் பத்திரப்பதிவு செய்வது. இதற்கு, உயர் நீதிமன்ற அனுமதி பெறவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை, தனி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி, தனி அதிகாரிகளை நியமிப்பது. அவர்கள் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்க, மத்திய அரசிடம் இருந்து மாதத்திற்கு 3.25 லட்சம் டன் அரிசி, கிலோ, மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என மூன்று விலைகளில் வாங்கப்படுகிறது.

தற்போது, அரிசி விலையை கிலோ 19 ரூபாய் என ஏற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கபட்டு உள்ளது.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com