ilakkiyainfo

ஜெயலலிதா எப்படி உள்ளார்? ஜெயலலிதாவை காண வந்த பிரபல தொழிலதிபர் மகன்!

ஜெயலலிதா எப்படி உள்ளார்? ஜெயலலிதாவை காண வந்த பிரபல தொழிலதிபர் மகன்!
October 19
03:54 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தொற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல் நிலை குறித்து ஒரு உறுதியான புகைப்படம் மருத்துவமனையில் இருந்து வெளிவராததால், முதல்வர் தொடர்பான வதந்திகள் சமூகவலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன.

இதனால் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிவதற்காக மருத்துவமனை வந்து செல்கின்றனர். மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, புதுவை ஆளுநர் கிரண்பேடி, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் முதல்வரின் உடல்நிலை குறித்து அறிந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்துகொள்ள பிரபல அதானி குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் அதானி சென்னை வந்தார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அவர் கூறுகையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிவதற்காக அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தாகவும் அவர் விரைவில் குணமடைய எங்களது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் சந்தித்து சிறிது நேரம் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சென்னை அப்பல்லோ மருத்துவமனை வந்து முதல்வரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து சென்றார்.

இதனிடையே ஜெயலலிதாவின் உடல் நிலை சீரான இடைவெளியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com