ilakkiyainfo

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்
March 25
01:31 2019

டைரக்டர் விஜய்யும் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி ‘த ஐயன் லேடி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். பாரதிராஜாவும் அவர் வாழ்க்கையை படமாக்குவதாக தகவல் வெளியானது.

201903250129210345_Acting-in-Jayalalithaa-role-Kangana-Ranawatte-Rs-24-crore_SECVPF.gif
இந்த நிலையில் டைரக்டர் விஜய்யும் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார்.

இவர் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.

இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com