ilakkiyainfo

டக்ளஸ் தேவானந்தா கடமைகளைப் பொறுப்பேற்றார்- (வீடியோ)

டக்ளஸ் தேவானந்தா கடமைகளைப் பொறுப்பேற்றார்- (வீடியோ)
October 31
19:26 2018

மக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் கடமைகளை இன்று ஆரம்பித்த பின் அதிகாரிகளுடன் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றப்படாததன் காரணமாக மீண்டும் ஒருமுறை எனக்கு இந்த வாய்ப்பு உருவாகி இருப்பதுடன் இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களை ஏமாற்றத்திற்கு அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாக்காமல், உரிய நேரத்தில் உரிய சேவையை வழங்க வேண்டும்.

மக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்கும்போது உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின்,அவ்வாறான எல்லாப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கு முன்வருவேன் என்றும் அவசியமான எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க என்னிடம் வரலாம்

dou3.dou5
doug

 

அத்துடன் முறைகேடுகள் இன்றி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நாம் செயலாற்ற வேண்டும். அதற்காக உத்தியோகத்தர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பையும் வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்க நான் தயாராக உள்ளேன்.

அரசியலில் இவ்விடத்தில் எந்த ஒருவரும் இருக்கலாம் என்றபோதும் அரசாங்கத்தின் கொள்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் அர்ப்பணித்துச் செயலாற்ற வேண்டும்.

இந்த அமைச்சிற்கு அனுபவம் வாய்ந்த, சிறந்த, திறமையான செயலாளர் ஒருவர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினாலும் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களினாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இங்கிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் அனுபவமுள்ளவர்கள்.

அதன் காரணமாக அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் அல்லும்பகலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஒருவன் என்ற வகையில் உங்கள் அனைவருக்கும் இருக்கின்ற புதிய கருத்துக்களையும் நிலவுகின்ற பிரச்சினைகளையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் முன்வைக்கலாம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com