டோனியின் மகளான சிவா தனது தந்தையை உற்சாகப்படுத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் இடம்பெற்றுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் இடையிலேயே டோனியின் மகளான ஸிவா தனது தந்தையை உற்சாகப்படுத்தினார். பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்த சிவா, ”பப்பா.. கோ பப்பா… ”என்று கோஷமிட்டார்.

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சூழற்சியில்  வெற்றி பெற்ற  டெல்லி அணி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தார்.

அதன்படி டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 150 ஓட்டங்கள்  எடுத்து, டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியை  டோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் அவரது மகள் ஸிவா நேரில் கண்டுகளித்தனர்.

போட்டிக்கு இடையே ஸிவா தனது தந்தையை உற்சாகப்படுத்தினார். பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்த சிவா, ”பப்பா.. கோ பப்பா… ”என்று கோஷமிட்டார்.

இது அங்கிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உங்கள் தந்தையின் பணியிடத்தில் அவரை உற்சாகப்படுத்துவதைவிட சிறந்தது வேறு எது” என்ற வாசகத்துடன் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு, ஏராளமான லைக்ஸ் குவிகிறது. சமூக வலைத்தளத்திலும் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.