தனது மனைவியை காணவில்லையென கணவர் முறைப்பாடு!!

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயரான தனது மனைவி கடந்த 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கணவர் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
33 வயதான ஏ.லூர்து சுறாங்கனி எனும் மூன்று பிள்ளைகளின் தாயே காணமல் போயுள்ளதாக கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் கொக்குப்படையான் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து முருங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் இவர் வீடு திரும்பாத நிலையில் அவரது கணவர் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தாயான ஏ.லூர்து சுறாங்கனி என்பவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776353945 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொணடு தெரி கணவர் அன்ரனி ஜெயராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment