ilakkiyainfo

தமிழர்களுக்கு அமெரிக்கா ‘100 சதவீத ஆதரவு’:சம்பந்தர்

தமிழர்களுக்கு அமெரிக்கா ‘100 சதவீத ஆதரவு’:சம்பந்தர்
November 23
21:38 2015

 

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என அமெரிக்க உயரதிகாரி சமந்தா பவர் உறுதியளித்தார் என சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அமெரிக்கா உயரதிகாரி சம்ந்தா பவருடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு

ஐ நாவுக்கான அமெரிக்காவின் நிரந்திரப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்தரப்பினரை சந்தித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமந்தா பவரை இன்று சந்தித்து பேசினர்.

அச்சந்திப்பில் போருக்கு பின்னரான காலத்திலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவித்தார்.

குறிப்பாக குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக உள்ளதை அவரது கவனத்துக்கு தாங்கள் கொண்டுவந்ததாகவும் சமபந்தர் மேலும் தெரிவித்தார்.

samantha-tna-meetஇலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வைப் பெற்றுத்தர தம்மாலான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து தமிழ் மக்கள் எவ்விதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சமந்தா பவர் தமக்கு வாக்குறுதி அளித்தார் எனவும் சம்பந்தர் கூறினார்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியத் தேவை, உண்மைகள் அறியப்பட வேண்டியது, உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டியத் தேவை ஆகியவை குறித்து தாங்கள் அவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், இனியும் இலங்கையில் இப்படியானச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் நல்லிணக்கம் தொடர்பிலும் சமந்தா பவர் அம்மையாருடன் கூட்டமைப்பினர் உரையாடியதாவும் சம்பந்தர் கூறினார்.

தமிழ் மக்களுக்கான வேலை வாய்ப்புகள், வீட்டு வசதி, மீள்குடியேற்றம், முறையான புனர்வாழ்வு, கைதிகளின் விடுதலை ஆகியவை குறித்தும் அவருடன் விரிவாகப் பேசப்பட்டதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது – சமந்தா பவர்

samantha-power-jaffna-1

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

samantha-power-jaffna-2இன்று காலை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவைச சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சமந்தா பவர், அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புச் செய்வதற்கு காத்துக் கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

samantha-power-osmaniya-1samantha-power-osmaniya-2samantha-power-osmaniya-3

இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்த சமந்தா பவர் அடுத்து, யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் புதிய விஞ்ஞான கூடத்தையும் திறந்து வைத்தார்.

இதையடுத்து, மழைக்கும் மத்தியில் மாணவர்களுடன் இணைந்து அவர், மட்டைப்பந்து (எல்லே) விளையாட்டிலும் ஈடுபட்டார்.

About Author

admin

admin

Related Articles

2 Comments

 1. arya
  arya November 24, 17:14

  தமிழர்கள் தாங்கள் பிறந்த நாட்டுக்கு எதிராக ஏகாதி பத்திய சக்திகளுக்கு 100 வீதம் கூட்டி கொடுப்பதால் அவர்வகளும் இவர்களுக்கு கொடுப்பார்கள், காட்டி கொடுக்கும் ஈன இனம் இந்த நாட்டை விட்டு வெளிஏற வேண்டும்

  Reply to this comment
 2. arya
  arya November 25, 15:28

  புலன்பெயர்ந்த்துகள் வெள்ளை காரனுக்கு குண்டி கழுவி வயிற்ரை நிரப்புதுகள் , புலத்தில் ( தமிழ்கள் ) உள்ளதுகள் வெள்ளைகாரனுக்கு குண்டியை கொடுத்து பிழைக்குதுகள், இலங்கை பிரிட்டனுக்கு அடிமை பட்டிருந்த காலத்திலும் சின்ஹளவர் எதிர்த்து போராடினர் , ஆனால் ஈன தமிழுகள் கூட்டி கொடுத்து தம் வாழ்வை ஒட்டினர் , இந்த ஈன இனம் திருந்த வேண்டும், கடவுளுக்கும் மேலான மகிந்த புலி வேசிமக்களை அழித்த படியால் தான் வடக்கில் ஒரு முதலமைச்சர் வர முடிந்தது , அவரை சந்திக்க இந்த அமெரிக்க உளவாளி பவரால் முடிந்தது என்பதை நன்றி மறந்த கூட்டம் மீண்டும் நினைத்து பார்க்க வேண்டும்.

  Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com