ilakkiyainfo

தானேயில் நடுரோட்டில் பெண் போலீஸ் மீது தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது -(வீடியோ)

தானேயில் நடுரோட்டில் பெண் போலீஸ் மீது தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது -(வீடியோ)
February 27
03:34 2016

தானேயை சேர்ந்த சிவசேனா பிரமுகர் சசிகாந்த் (வயது44). இவர் நேற்றுமுன்தினம் தனது காரில் அங்குள்ள கிழக்கு விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது போனில் பேசியபடியே காரை ஓட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கார் நிதின் ஜங்ஷன் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த 29 வயது போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் இதை கவனித்தார்.

இதையடுத்து அவர் சசிகாந்தின் காரை நிறுத்தும்படி சைகை காட்டினார். ஆனால் அவர் காரை நிறுத்தாமல் சென்றார். உடனே போக்குவரத்து பெண் போலீஸ் காரின் குறுக்கே சென்று நின்றார்.

இதனால் சசிகாந்த் காரை நிறுத்தினார். இதையடுத்து பெண் போக்குவரத்து போலீஸ் அவரிடம் சென்று உரிமத்தை காட்டும்படி கேட்டார். இதற்கு சசிகாந்த் மறுத்துவிட்டார். மேலும் அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில் திடீரென கோபம் அடைந்த அவர் காரில் இருந்து இறங்கி போக்குவரத்து பெண் போலீசை மாறி, மாறி கன்னத்தில் அறைந்தார். இதில் அவர் நிலைகுலைந்துபோனார். மேலும் அவரது முக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அப்போது அங்கு வந்த வக்கீல் பிரதீக் பவார் என்பவர் சசிகாந்தை தடுக்க முயன்றார்.

ஆனால் கோபத்தில் இருந்த சசிகாந்த் அவரையும் விட்டுவைக்கவில்லை. பிரதீக் பவாரும் தாக்குதலுக்கு உள்ளானார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏராளமானவர்கள் அப்பகுதியில் திரண்டுவிட்டனர்.

அங்கு நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து பெண் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகாந்தை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை போலீசார் சாட்சியாக எடுத்துக்கொண்டனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com