ilakkiyainfo

தாயின் கைகளிலிருந்து பறித்தெடுக்கப்பட்ட பதினேழு நாள் சிசு தரையில் அடித்து கொலை, 22 வயதான யுவதி கைது

தாயின் கைகளிலிருந்து பறித்தெடுக்கப்பட்ட பதினேழு நாள் சிசு தரையில் அடித்து கொலை, 22 வயதான யுவதி கைது
September 06
06:48 2014

கொழும்பு புற நகர் பகு­தியை அண்­மித்த கஹ­து­டுவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பொல் கஸ் ஓவிட்ட பிர­தே­சத்தில் தாயின் கைக­ளி­லி­ருந்து பறித்­தெ­டுக்­கப்­பட்ட 17 நாட்­க­ளே­யான சிசுவை 22 வயது யுவதி ஒரு­வர் தரையில் அடித்துக்கொன்ற சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

கஹ­து­டுவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இலக்கம் 81, பொல்­க­ஸ்ஓவிட்ட, அம்­ப­லங்­கொட எனும் முக­வ­ரியில் அமைந்­துள்ள வீட்டில் குறித்த யுவ­தியின் படுக்­கை­ய­றையில் வைத்து நேற்று பிற்­பகல் 1.15 மணி­ய­ளவில் இவ்­வாறு குழந்தை தரையில் அடிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் அலு­வ­லகத்தின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரிவித்தார்.

குறித்த சிசுவின் தந்­தையின் அக்காவின் மூத்த மகளே இவ்­வாறு சிசுவை கொலை செய்­துள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

ஆண் சிசு ஒன்றே இவ்­வாறு தரையில் அடிக்­கப்­பட்­டுள்ள நிலையில் படு­கா­யங்­க­ளுடன் சிசு வேதர வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட பின்னர் உயி­ரி­ழந்­துள்­ளது.

22 வய­தான குறித்த யுவ­தியை கஹத்­து­டுவ பொலிஸார் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

நேற்­றைய தினம் சிசுவின் தந்தை வீட்டில் இல்­லாத சமயம் தாய் சிசுவை தனது அர­வ­ணைப்பில் வைத்­துக்­கொண்­டுள்ளார். இதன் போது சிசுவின் தந்­தையின் அக்­காவின் மூத்த மக­ளான 22 வய­து­டைய யுவதி குழந்­தையை தன்­னிடம் கொடுக்­கு­மாறும் அதன் கைகளில் நூலொன்­றினை கட்ட வேண்டும் எனவும் கோரி­யுள்ளார்.

கறுப்பு நிற நூல் ஒன்றை கட்­டு­வ­தற்­காக குழந்­தையை அந்த யுவதி கோரி­யுள்ள போதும் தாய் குழந்­தையை கொடுக்க மறுத்­துள்ளார்.

இதனால் ஆத்­தி­ர­முற்­ற குறித்த யுவதி குழந்­தையை பறித்­துக்­கொண்டு தனது படுக்கை அறைக்கு சென்று அங்கு வைத்து தரையில் அந்த சிசுவை அடித்­துள்­ள­தாக கஹ­து­டுவ பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதனை அடுத்து காய­ம­டைந்த சிசு வேதர வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் களு­போவில போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றப்பட்டுள்ளது.

களு­போ­வில வைத்­தி­ய­லையில் அவ­சர சத்­திர சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சைக்கு எடுக்­கப்­பட்ட சிசுவின் உயிரை காப்பாற்ற வைத்­தி­யர்கள் போரா­டிய போதும் அது சாத்­தி­யப்­ப­டாமல் சிசு உயி­ரி­ழந்த­தாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் குறிப்­பிட்டார்.

சிசுவை கவனிப்பதற்காகவே  22வயதான குறித்த யுவதியை மேற்படி வீட்டில் உதவிக்கு கூட்டிவந்து வைத்திருந்த தாக தெரியவருகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் விசேடவிசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com