அச்சுவேலி தெற்கு , அச்சுவேலி என்ற பகுதியைச் சேர்ந்த தாயும் மகனும் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

 

தம்பையா மகேந்திரன் என்பவருடைய மனைவியும், அவரது மகனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன தாய் 40 வயதுடைய, ஜேவர்தன் உமயாலோகனா என்றும், அவரது மகன் 6 வயதுடைய ஜேவர்தன் ஜோகலவன் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதே போன்று புறக்கோட்டையைச் சேர்ந்த நபரொருவரும் கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணமல் போன நபர் 24 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.