காலையில் தூங்கி எழுந்ததும் கிச்சனுக்கு சென்று காபி குடிப்பது எல்லோருக்கும் வழக்கம்தான். இதே போல்தான் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய கிச்சனுக்கு சென்று பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காபி போட்டு குடிக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலை எடுத்து காபி போடுவதில் என்ன பரபரப்பு இருக்கப்போகிறது என்று கேட்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ். அந்த பெண், காபியில் தன்னுடைய தாய்ப்பாலையும் கலந்து காபி செய்தார் என்பதுதான் ஆச்சரியமான செய்தி.
கடந்த வாரம் யூடியூம் இணையதளத்தில் இந்த வீடியோ வெளியானது. ஒரு அமெரிக்க பெண் கிச்சனுக்குள் நுழைந்து பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றுகிறார்.
பின்னர் தனது உடையை மேலே தூக்கி தனது மார்பில் இருந்து மிகவும் கவனமாக தாய்ப்பாலை அந்த காப்பியில் கலக்குகிறார். அதன்பின்னர் தாய்ப்பால் கலந்த காபியை குடிப்பதற்காக எடுத்து செல்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியான அடுத்த நிமிடமே ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது.
ஒரே வாரத்தில் சுமார் 20 மில்லியன் இணையதள பயனாளர்கள் இந்தவீடியோவை பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இந்த வீடியோதான் கடந்த வாரம் அதிக நபர்களால் பகிரப்பட்ட வீடியோ என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்க நீங்களும் ஆர்வமாக இருக்கின்றீர்களா?
இதோ உங்களுக்காக அந்தவீடியோ…