இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார்.

சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது.

ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார்.

மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் வைத்தியர்களிடம் ஆலோசனை  நடத்தினார்.

ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை கச்ராஸ் எனும் மருத்துவமனை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

ஷியாம் லால் ஒரு செபாசியஸ் ஹார்ன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது.

செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

எக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் கூறினார்.