ilakkiyainfo

திராணியார் என்றால் தனியாக நிற்கும் திராணி இவரிடம்தான் இருக்கிறதாம்

திராணியார் என்றால் தனியாக நிற்கும் திராணி இவரிடம்தான் இருக்கிறதாம்
January 24
13:55 2015

2016 இல் தமிழக மக்கள் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப் போவது கேப்டனைத்தான். இந்த மாநிலத்தை ஆளும் பொறுப்பை தே.மு.தி.க.வின் கையில்தான் மக்கள் கொடுப்பார்கள். முதல்வர் பதவியில் உட்காரும் முழுத் தகுதியும் படைத்தவர் கேப்டன் மட்டுமே. இதை நான் சொல்லவில்லை தமிழகமே சொல்லுது!

இந்த இயக்­கத்தில் இணைஞ்சி உழைக்­கிற உங்க எல்­லா­ரையும் உச்ச பத­வியில் உட்­கார வெச்சு அழகு பார்க்­காமல் நாங்க ஓய­மாட்டோம் என்று தே.மு.தி.க பொதுக்­கு­ழுவில் நிர்­வா­கி­களைப் பார்த்துப் பிரே­ம­லதா போட்ட சபதம் அவர்­களைச் சிலிர்க்க வைத்­தது.

கோவை வெள்­ளக்­கிணர் பிரிவு பகு­தி­யி­லுள்ள ஸ்ரீ லட்­சுமி நாராயண் மஹாலில் நடந்த பொதுக்­கு­ழுவில் பிரே­ம­ல­தாவே ஹைலைட்!

பொதுக்­குழு மண்­ட­பத்­துக்கு வந்த நிர்­வா­கி­க­ளுக்கு ஏகத்­துக்கும் கெடு­பிடி. உள்ளே நடப்­பது வெளியே போகக்­கூ­டாது என்­ப­தற்­காகச் செல்போன் உள்­ளிட்ட எலெக்ட்­ரானிக் சாத­னங்கள் கொண்டு செல்ல நிர்­வா­கி­க­ளுக்குத் தடை பத்­தி­ரி­கை­யா­ளர்கள் உள்ளே நுழைந்து விடா­த­படி கண்­கா­ணிக்க மண்­டப மாடியில் குடை­யுடன் ஆட்­களை நிறுத்­தி­யி­ருந்­த­துதான் இன்னும் காமெடி!

ஆனாலும் பொதுக்­கு­ழுவில் நடந்த நிகழ்­வு­களைச் சில நிர்­வா­கிகள் நிரு­பர்­க­ளிடம் லைவ்­வாக பகிர்ந்­தனர். நீங்கள் குறிப்­பிட்­ட­ப­டியே பிரே­ம­ல­தாவின் பிளான்­படி சில நிர்­வா­கிகள் நம்மைக் கழட்­டி­விட்டு அவங்க தனியா நின்­னாலும் தேற­மாட்­டாங்க ஒப்­புக்கு சிலரை கூட்­டணி வெச்­சாலும் உருப்­ப­ட­மாட்­டாங்க என்று பா.ஜ.கவைச் சீண்­டினர்.

தீர்­மான வாசிப்பு முடிந்­ததும் பிரே­ம­லதா மைக் பிடித்தார். லஞ்சம் ஊழ­லுக்கு நான் எதிரி என்று நெத்­தி­யடிக் கொள்­கையை அறி­விச்சு கட்சி ஆரம்­பிச்ச ஒரே தலைவர் இந்­தி­யாவில் நம் கேப்டன் தான் எந்தத் தேர்­த­லையும் தனியா நிற்­கிற திராணி அவ­ரிடம் இருக்­குது அதனால் தான்.

அவரைத் திரா­ணியார் என்று புகழ்­றீங்க. ஆனாலும் கடந்த தேர்­தலில் அர­சியல் சூழ்­நி­லை­யா­லேயும் மக்கள் நலனை மன­சுல வெச்சும் நாம ஒரு கூட்­டணி போட்டோம்.

ஆனால் அ.தி.மு.க ஜெயிச்சு ஆட்­சியில் அமர்ந்­துச்சு. பொறுப்­புக்கு வந்­த­வங்க பொறுப்பா நடந்­துக்­க­ணுமா இல்­லையா? என்­றவர் கார­சா­ர­மான சப்­ஜெக்­டுக்கு வந்தார்.

இங்கே யார் யாரெல்­லாமோ நானே முதல்வர் நானே முதல்வர் என்று சொல்­லிக்­கி­றாங்க. முதல்வர் வேட்­பா­ளரா இவர் நிறுத்­தப்­ப­டலாம் அவர் நிறுத்­தப்­ப­டலாம் என்று கூடப் பேச்சு இருக்­குது.

அதை­யெல்லாம் பற்றி நாம் கவ­லைப்­பட வேண்டாம். நாம் நம்ம கட­மையைப் பண்­ணிட்டே இருப்போம். கூட்­டணி விஷ­யங்­களை கேப்டன் முடிவு பண்­ணிக்­குவார்.

2016இல் தமி­ழக மக்கள் முதல்வர் பத­வியில் உட்­கார வைக்­கப்­போ­வது நம்ம கேப்­ட­னைத்தான் இந்த மாநி­லத்தை ஆளும் பொறுப்பை தே.மு.தி.க கையில் தான் மக்கள் கொடுப்பாங்க் முதல்வர் பத­வியில் உட்­காரும் முழுத் தகுதி படைத்­தவர் கேப்டன் மட்­டுமே. இதை நான் மட்டும் சொல்­ல­வில்லை தமி­ழ­கமே சொல்­லுது.

நம்ம கேப்­ட­னோட உடல்­ந­லனைப் பற்றிச் சிலர் வாய்க்கு வந்­த­படி பேசு­றாங்க. சில பத்­தி­ரி­கை­களும் அப்­படி எழு­து­றது. ஆனால் அவங்க சொல்­றது அத்­த­னையும் பொய் எல்லா மனு­ஷ­னுக்கும் உடல் சுக­வீனம் வர்­ரது இயல்­புதான்.

நம்ம கேப்­டனை நான் இரு­பத்து நாலு மணி­நே­ரமும் கண்ணும் கருத்­துமா கவ­னிச்­சுட்டு இருக்­கிறேன். அவரைப் பற்றி வீண் வதந்தி பரப்­பு­ற­வங்­களை சும்மா விடக் கூடாது.

அவங்க மேலே மிகக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கணும் என்று தலைமைக் கழ­கத்தை நான் கேட்­டு­கிறேன். நீங்க எல்லாரும் என்­னையும் கேப்­ட­னையும் அண்ணி அண்ணன் என்று சொல்­றீங்க ஆனாலும் நாங்க உங்க அப்பா அம்மா மாதிரி ஒரு அப்பா அம்­மா­வுக்கு எத்­தனை பிள்­ளைகள் இருந்­தாலும் எல்லார் மேலேயும் ஒரே மாதி­ரித்தான் பாசம் வெச்­சி­ருப்­பாங்க.

அதே மாதி­ரித்தான் நாங்­களும் உங்க எல்லார் மேலேயும் அன்பு வெச்­சி­ருக்கோம். இந்த இயக்­கத்தில் இணைஞ்சு பாடு­பட்டு உழைக்­கிற உங்க எல்­லா­ரையும் உச்ச பத­வியில் உட்­கார வெச்சு அழகு பார்க்­காமல் நங்க ஓயவே மாட்டோம்.

2016இல் மட்­டு­மில்லை. அதுக்குப் பிறகும் பல தேர்­தல்­களில் நம்ம கேப்­டனே முதல்­வ­ராவார். நூறு வரு­ஷங்கள் அவர் நல்ல ஆரோக்­கி­யத்­தோடு இருந்து உங்­க­ளையும் இந்த மாநி­லத்­தையும் வழி நடத்­துவார்.

அவ­ரோட ஆரோக்­கி­யத்­துக்கு நான் கியா­ரண்டி என பட­பட என்று பொரிந்­து­தள்­ளி­விட்டு அமர்ந்தார் என்­றனர்.

பொதுக்­கு­ழுவில் பிரே­ம­ல­தாவை அக்­கட்­சியின் மக­ளி­ர­ணி­யினர் தோளில் தூக்­காத குறை­யாகக் கொண்­டாடி விட்­டனர். இதை ஓரக்­கண்ணால் ரசித்தார் விஜ­யகாந்த். பிரே­ம­ல­தா­வுக்குப் பிறகு உரை­யாற்­றிய விஜ­ய­காந்தின் பேச்சில் சுரத்­தில்லை.

அவ­ரது பேச்­சிற்கு நடுவே பத்­தி­ரி­கை­யா­ளர்­களை உள்ளே அனு­ம­தித்­தனர். நான் எதையும் மன­சுல ஒளிச்­சிட்டு பேசு­ற­வ­னில்லை மன­சுல பட்­டதைச் சொல்­லி­டுவேன்.

ஊருக்கே சோறு போடுற தஞ்­சா­வூர்­லேயே இப்போ அரி­சிக்கு தட்­டுப்­பாடு விவ­சா­யிகள் அந்­த­ள­வுக்கு நலிஞ்­சுட்­டி­ருக்­கி­றாங்க. இதைப் பத்தி சொன்னா அர­சாங்­கத்­துக்கு கோபம் வருது என்று சிம்­பிளா முடித்தார் விஜ­யகாந்த்.

பொதுக்குழுவில் எழுச்சியாக சென்டிமென்டாக அதிரடியாக அரசியல் பேசியே பிரமேலதாவின் பேச்சுதான் நிர்வாகிகளைச் சிலிர்க்க வைத்தது.

பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பது பற்றி அவர் பேசாவிட்டாலும் விஜயகாந்தான் அடுத்த முதல்வர் என்று நான்கைந்து முறை சொல்லியிருப்பதால் கூட்டணியில் நீடிப்போமா இல்லையா என்ற குழப்பத்துடனேயே தே.மு.தி.க நிர்வாகிகள் கலைந்துசென்றனர்!

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com