திருநங்கை மகனுக்கு உதவிய தாய்; 61 வயதில் சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்தார்

அமெரிக்க மாநிலமான நெப்ராஸ்காவின் தலைநகர் ஓமஹாவில் தனது திருநங்கை மகனுக்கு உதவும் வகையில், தனது சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
61 வயது மூதாட்டி சிசிலி எலிக்டேவிகன் மகன் மேத்யூ எலிக்டே ஒரு கட்டத்தில் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார். அவர் உடல் ரீதியாக முழுமையான ஒரு ஆணாக இருந்தாலும் மனதளவில் அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர துவங்கினார். இதையடுத்து அவர் தனது உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஒரு ஆணான எலியட் டக்ஹெர்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேத்யூ எலிக்டே மற்றும் எலியட் டக்ஹெர்டி தங்கள் உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும், இருவரின் வாழ்க்கைக்கான அடையாளமாக ஒரு குழந்தை வேண்டும் என முடிவு செய்தனர்.
அது இவர்களால் சாத்தியமில்லாததால் மேத்யூவின் 61 வயது தாயான ரினெக் எலட்ஜ் அதற்கு உதவி செய்வதாக முன் வந்து செயற்கை கருத்தரித்தலுக்கு சம்மதித்தார்.
மேத்யூவின் தாய் செயற்கை கருத்தரித்தலுக்கு சரியானவரா, குழந்தையை தாங்கக் கூடிய சக்தி இருக்கிறதா என்பன போன்ற பல குழப்பங்கள் சூழ்ந்துள்ளன. இதற்காக ஒமஹா பல்கலைக்கழகத்தின் நெப்ராஸ்கா மருத்துவ மையத்தின் உதவுடன் மேத்யூவின் தாயிற்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது.
அதில் மேத்யூவின் தாயிற்கு கரு முட்டை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எலியட்ஸின் சகோதரியிடம் இருந்து கருமுட்டை தானம் பெறப்பட்டு, அது 61 வயது மூதாட்டியான சிசிலிக்கு பொருத்தப்பட்டது. அதன் பின் சிசிலியின் மகன் மேத்யூவின் விந்தணுக்கள் அந்த கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு சிசிலி கர்ப்பமானார்.
இந்நிலையில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது பெண் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு ’உமா லூயிஸ்’ என பெயர் வைத்துள்ளனர்.
”இந்த முடிவில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அது இயற்கையாக் எங்களுக்குள் தோன்றிய உள்ளுணர்வு. நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கிறீர்கள், திருமணம் செய்து கொண்டீர்கள் எனில் உங்களுக்கென ஒரு குழந்தையையும் ,தனி குடும்பத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒரு உதாரணம். இன்றைய தொழில்நுட்பத்தில் பல வழிகளில் அதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றிகள் “ என மேத்யூ எலிக்டே பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment