திருமணத்தை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய பெண் சாமியார்: மணமகன் அத்தை பலி -வீடியோ
அரியானா மாநிலம் கர்னல் நகரில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த சாத்வி தேவா தாகூர் என்ற பெண் சாமியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
திருமண நிகழ்வில் மணமகனின் உறவினர்கள் நடனம் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த பெண் சாமியார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தனது மகிழ்ச்சியை நடனமாடி வெளிப்படுத்தினார்.
இந்த துப்பாக்கி சுடும் கொண்டாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர்.
ஆனால் துப்பாக்கி குண்டுகள் தவறுதலாக அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் மீது பட்டதில் மணமகனின் அத்தை பரிதாபமாக பலியானார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
இதைக் கண்ட அந்த பெண் சாமியார் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தப்பியோடிய பெண் சாமியார் மீது கர்னல் போலீசார் கொலை முயற்சி, ஆயுதங்கள் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment