தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பிரபலமான, ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டடம், செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது.

 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள, எம்பயர் ஸ்டேட் கட்டடம், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

கடந்த, 1970 வரை, உலகின் மிக உயர்ந்த கட்டடம் என்ற பெருமை, இதற்கு இருந்தது. அதற்கு பின், உலகின் பல்வேறு பகுதிகளில், இதை விட உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டு விட்டன.

நியூயார்க் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டடத்தில், 102 மாடிகள் உள்ளன; 1,454 அடி உயரம் உடையது. அமெரிக்காவின் முக்கிய நாட்கள், முக்கிய பண்டிகைகளின் போது, இந்த கட்டடத்தில், பல வண்ணங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கும்.

இந்  நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒக்டோபர் 27 ஆம் திகதி, எம்பயர் ஸ்டேட் கட்டடம், செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது.