ilakkiyainfo

6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவல்;5 பேர் இலங்கை இஸ்லாமியர்கள்

6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவல்;5 பேர் இலங்கை இஸ்லாமியர்கள்
August 24
07:50 2019

லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து கோவைக்கு நேற்று நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை இஸ்லாமியர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கோவையில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

rt1சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை , மற்றும் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் சீருடையிலும்,  சிவில் உடையிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாநகரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போதிய பாதிகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவ, சந்தேகிக்கும் வகையில் யாராவது தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com