ilakkiyainfo

தெய்வமாக வணங்கப்படும் திரிசூலம் மச்சத்துடன் பிறந்த ஜார்கண்ட் குழந்தை! -(வீடியோ)

தெய்வமாக வணங்கப்படும் திரிசூலம் மச்சத்துடன் பிறந்த ஜார்கண்ட் குழந்தை! -(வீடியோ)
November 10
21:26 2016

ஜார்கண்ட் மாநிலத்தில் திரிசூலம் மச்சத்துடன் பிறந்திருக்கும் குழந்தை தெய்வம் என கருதி பலரும் கூட்டம் கூட்டமாக சென்று தூங்கி கொண்டிருக்கும் அந்த குழந்தையை வணங்கி வருகின்றனர்.

பிள்ளயார் பால் குடிக்கிறார், பப்பாளி பழத்தில் பிள்ளையார், அனுமான் குழந்தை, வானில் சாய்பாபா தெரிகிறார், பசுமாட்டின் ஐந்தாம் காலை தொழுவது என இந்தியாவில் ஏகப்பட்ட திடீர் திடீரென பல செய்திகள் கிளம்பும்.

இவற்றில் பெரும்பாலானவை பொய், புரளி, பித்தலாட்டமாகவும். சிலவன தவறான புரிதலாக இருக்கின்றன.

இது போன்ற ஒரு புதிய செய்தி தான் ஜார்கண்ட் மாநிலத்தில் திரிசூலம் மச்சத்துடன் பிறந்திருக்கும் குழந்தை தெய்வம் என கருதி பலரும் கூட்டம் கூட்டமாக சென்று தூங்கி கொண்டிருக்கும் அந்த குழந்தையை வணங்கி வருகின்றனர்.

வட இந்தியாவின் சில செய்தி ஊடகங்களும் இதை படம்பிடித்து காண்பித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது உண்மையா? பொய்யா?

10-1478769056-1factorfalseinfantbornwithtridentmarkonhisheadஅக்டோபரில் ஆரம்பித்தது….

அக்டோபர் பாதியில் தான் இந்த செய்தி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. ஆஜ் தாக் எனும் ஆன்லைன் செய்தி ஊடகத்தில் இது பரபரப்பாக வெளியானது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் தும்கா எனும் மாவட்டத்தில் தான் இந்த திரிசூலம் மச்சம் இருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பிறந்தது கடந்த ஆகஸ்ட், 2016.

10-1478769098-2factorfalseinfantbornwithtridentmarkonhis2

கடவுளின் குழந்தை!

அருண் குன்வார் என்பவற்றின் பேரனான இவரை கடவுளின் குழந்தை, அதிசய பிறவி என குடும்பத்தாரும், சுற்றத்தாரும் அழைத்து வருகின்றனர்.

இக்குழந்தையின் நெற்றி, மார்பு, தோள்பட்டை பகுதிகளில் திரிசூலம், ஓம், ஸ்வஸ்திக் போன்ற இந்து மத குறிகள் இருக்கிறது என குடும்பத்தார் கூறுகின்றனர்.

10-1478769062-3factorfalseinfantbornwithtridentmarkonhishead
விஷ்ணு – சிவ அவதாரம்?

ஊர்மக்கள் இந்த குழந்தையை வந்து பார்த்து, வணங்கி செல்கின்றனர். மேலும், இந்த குழந்தையை விஷ்ணு – சிவ அவதாரம் என்றும் கூறி வருகின்றனர். இக்குழந்தை வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போதும் கூட மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். வீட்டார் இக்குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறது எந்த உடல்நலக் கோளாறும் இல்லை என கூறுகின்றனர்.

10-1478769069-4factorfalseinfantbornwithtridentmarkonhishead

இரத்தக்குழல் கட்டி (Hemangioma)

ஊர் மருத்துவர்கள் இதை கண்டு ஆச்சரியம் அடைந்தாலும். இது உடல்நல குறைபாடாக கூட இருக்கலாம். பெரிய ஹாஸ்பிட்டல்களுக்கு எடுத்து சென்று காண்பியுங்கள் என கூறுகின்றனர். இது “Hemangioma” இரத்தக்குழல் கட்டி பிரச்சனையாக, இரத்த நுண் குழாய் கோளாறாக கூட இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

மெய்யா? பொய்யா? இது உண்மையா? பொய்யா என்பதை தாண்டி, இது மச்சமா? அல்லது உட்லநலக் கோளாறா? அல்லது அரிதாக இந்து மத குறியான திரிசூலம் போலவே உண்டாகிவிட்டதா? என பல கேள்விகள் எழுந்தாலும், சரியான புரிதலின்மை, ஊர் மக்கள் மற்றும் வீட்டில் இருப்பவர்களுக்கு சரியான பகுத்தறிவு, படிப்பறிவு இல்லை என்பதை தான் சுட்டிக் காட்டுகிறது.

காணொளிப்பதிவு! தெய்வமாக வணங்கப்படும் திரிசூலம் மச்சத்துடன் பிறந்த ஜார்கண்ட் குழந்தையின் காணொளிப்பதிவு.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com