ilakkiyainfo

தெற்காசிய பளுதூக்கல் அணியில் யாழ். தமிழ் வீராங்கனை!

தெற்காசிய பளுதூக்கல் அணியில் யாழ். தமிழ் வீராங்கனை!
November 26
12:08 2019

தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனை என்ற பெருமையை யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பெற்றுள்ளார்.

அதன்படி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்கஹராவில் நடைபெறவுள்ள (டிசம்பர் 1 முதல் 10 வரை) 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் அணியில் ஆர்ஷிகா இடம்பிடித்துள்ளார்.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை பளுதூக்கல் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 7 வீர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனை படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகாவும் முதல்தடவையாக இடம்பிடித்துள்ளார்.

ARSHIKA-COVERதெற்காசிய விளையாட்டு விழாவினை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகுதிகாண் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்றன.

இதில் பெண்களுக்கான 64 மற்றும் 71 ஆகிய கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் பங்குகொண்ட ஆர்ஷிகா, ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 95 கிலோ கிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 171 கிலோ கிராம்) தனது திறமையை வெளிப்படுத்தி தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த இளம் வயது வீராங்கனையாகவும், தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனையாகவும் அவர் தனது பெயரை பதிவு செய்துதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com