ilakkiyainfo

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­பட்­ட­போது மகிழ்ச்சி பர­வ­சப்பட்ட இரா.சம்­பந்தன்!! -(வீடியோ)

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­பட்­ட­போது  மகிழ்ச்சி பர­வ­சப்பட்ட இரா.சம்­பந்தன்!! -(வீடியோ)
February 05
02:02 2016

கொழும்பு காலி முகத்­தி­டலில் நேற்று கொண்­டா­டப்­பட்ட நாட்டின் 68 ஆவது தேசிய சுதந்­திர தின விழாவில் தேசிய கீதம் சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களில் பாடப்­பட்­ட­மை­யா­னது அனை­வ­ரையும் கவர்ந்த விட­ய­மாக அமைந்­தது.

அத்­துடன் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்­பட்­ட­போது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் மகிழ்ச்சி பர­வ­சத்­துடன் உணர்ச்­சி­வ­சப்­பட்ட நிலையில் காணப்­பட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்ற நேற்­றைய சுதந்­திர தின நிகழ்வில் முதலில் சிங்களத்தில் தேசியக் கீதம் இசைக்­கப்­பட்­டது. பின்னர் நிகழ்வு நிறை­வு­றும்­போது தேசியக் கீதம் தமிழில் இசைக்கப்பட்டது.

இந்­நி­லையில் முதலில் சிங்­க­ளத்தில் மட்டும் தேசியக் கீதம் இசைக்­கப்­பட்­ட­போது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த தமிழ் பேசும் தலை­வர்கள் முகம் சுளித்­துக்­கொண்­டி­ருந்­த­துடன் நேரடி ஒளி­ப­ரப்பை பார்த்த பொது மக்­களும் உற்­சாகம் இழந்­தனர்.

எனி்னும் நிகழ்வின் இறு­தியில் கொழும்பு இரா­ம­நாதன் இந்து மகளிர் கல்­லூரி மாண­விகள் தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் இசைத்­தனர்.

இத­னை­ய­டுத்து நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­மந்தன் மற்றும் மலை­யக கட்­சி­களின் பிர­தி­நி­திகள் முகங்கள் பிர­கா­சித்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்­கப்­பட்­ட­போது நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­மந்தன் மகிழ்ச்சி பர­வ­சத்­துடன் உணர்ச்­சி­வ­சப்­பட்ட நிலையில் காணப்­பட்டார்.

மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் முகங்­க­ளிலும் மகிழ்ச்சி கரை­பு­ரண்­டோ­டி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.

அத்­துடன் 68 ஆவது தேசிய சுதந்­திர தின நிகழ்­வு­களின் நேரடி ஒளி­ப­ரப்­புக்­களை பார்த்­துக்­கொண்­டி­ருந்த மக்கள் மத்­தி­யிலும் தேசிய கீதம் தமிழில் இசைக்­கப்­பட்­ட­போது பர­வசம் ஏற்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது.

நாட்டில் 1949 ஆம் ஆண்டு கொண்­டா­டப்­பட்ட முத­லா­வது தேசிய சுதந்­திர தினத்தில் தமி­ழிலும் தேசியக் கீதம் இசைக்கப்பட்­டது. அதன் பின்னர் சில சந்­தர்ப்­பங்­களில் தேசியக் கீதம் தமிழில் இசைக்­கப்­பட்­டது.

ஆனால் கடந்த பல தசாப்­தங்­க­ளாக தேசியக் கீதம் சுதந்­திர தின நிகழ்வில் இசைக்­கப்­ப­ட­வில்லை. அந்­த­வ­கையில் நேற்­றைய தினமே இவ்­வாறு தேசியக் கீதம் தமிழில் இசைக்­கப்­பட்­டமை விசேட அம்­ச­மாகும்.

மேலும் தமிழில் தேசியக் கீதம் இசைக்­கப்­ப­டு­வ­தற்கு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் கடும் எதிர்ப்பு வெளியிட்­டி­ருந்த நிலை­யிலும் சுதந்­திர தின நிகழ்வில் தேசியக் கீதம் இசைக்­கப்­பட வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்தது.

68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் சபாநாயகர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

68 ஆவது சுதந்திர தினம்: நாடளாவிய ரீதியில் நிகழ்வுகள்

68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

* கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள நாட்டின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

* கொள்ளுப்பிட்டி பொல்வத்த ஶ்ரீ தர்மகீர்த்திராம விஹாரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சயம வழிபாடுகள் இடம்பெற்றன.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

* கொச்சிக்கடை ஶ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றன.

இதில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டிருந்தார்.

* புஞ்சி பொரள்ளையிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற சமய நிகழ்வில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்துகொண்டிருந்தார்.

* கொழும்பு 12 ஆட்டுப்பட்டி தெருவிலுள்ள இலங்கை கிறிஸ்தவ திருச்சபையிலும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

* சுதந்திர தினத்தை முன்னிட்டு மருதானை ஜூம்மா பள்ளிவாசலிலும் இன்று விசேட துவா பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

இதேவேளை, 68 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com