முன்னைய அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­தி­ரியும் வர்த்­த­க­ரு­மான ஏ.எஸ்.பி.லிய­ன­கே யின் பீ கொக் மாளி­கையின் நீச்சல் தடா­கத்தில் நிரப்பப்பட்­டுள்ள மணல் நேற்று முற்­றாக அகற்றப்­பட்­டது.

ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் நாவல பீகொக் மாளி­கையில் மண­லால் நிரப்­பப்பட்­டுள்ள நீச்சல் தடா­கத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜபக்ஷ­வுக்கு சொந்­த­மான தங்கம் உள்­ள­தாக கதைகள் உலா வரும் நிலையில் அது குறித்து அவர் பொலிஸ் மா அதி­ப­ரி டம் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக விசா ­ரணை இடம்­பெறும் நிலை­யி­லேயே அதன் ஒரு அங்­க­மாக இந்த மணல் அகற்­றப்­பட்­டது.

இது குறித்து விசா­ரணை செய்து வரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களின் மேற்­பார்­வையில் இவ்­வாறு இந்த மணல் அகற்­றப்­பட்­ட­துடன்

அங்கு எவ்­வித தங்­கமும் கண்டு பிடிக்­கப்­ப­ட­வில்லை.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் விஜித் குணரத்ன தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மற்றும் இரா­ஜ­கி­ரிய பொலி­ஸாரின் மேற்­பார்­வைக்கு மத்­தி­யி­லேயே இந்த மணல் அகற்றப்­பட்­டது.

ஏற்­க­னவே ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் முறைப்­பாட்­டுக்கு அமைய அவ­ரிடம் கடந்த மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் இரு மணி நேரம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இந்த விசா­ர­ணை­களை நடத்தி வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்­தது.

ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் நாவல பீகொக் மாளி­கையில் மண­லினால் நிரப்­பட்­டுள்ள நீச்சல் தடா­கத்தில் தங்கம் உள்­ளதா என்­பது குறித்து எதிர்­வரும் முதலாம் திக­திக்கு முன்னர் தமக்கு அறிக்கை சமர்­பிக்­கு­மாறு பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­த­ர­வுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தை­ய­டுத்தே இது குறித்து விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

இந் நிலையில் குறித்த நீச்சல் தடா­கத்தில் 35 கியூப் மணல் ஏ.எஸ். பி.லிய­ன­கேயின் செலவில் பணிக்கு அமர்த்­தப்­பட்ட 10 ஊழி­யர்­களால் அகற்றப்­பட்­டது.

அவர்கள் இந்த பணில் ஈடு­ப­டுத்­தப்­பட முன்னர் அந்த நீச்சல் தடா­கத்தில் இருந்த மணலின் மாதி­ரிகள் பெறப்­பட்­டன. பின்னர் அவ்­வூ­ழியர்­களின் உடலில் இருந்த அனைத்து தங்க ஆப­ர­ணங்­களும் அகற்றப்­பட்­டன.

இதனைத் தொடர்ந்தே ஒவ்­வொரு பக்­கட்­டுக்­க­ளாக மணல் அள்­ளப்­பட்­டது. அதன் பின்னர் பெக்கோ இயந்­தி­ரமும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. காலை 10.00 மணி­ய­ளவில் அரம்­பித்த இந்த நட­வ­டிக்­கைகள் மாலை 5.00 மணி வரை நீடித்­தி­ருந்­தது.

மணல் அகற்­றப்­பட்­டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஏ.எஸ்.பி.லியனகே தற்போது தனக்கு மன நிறைவாக உள்ளதாகவும் வீணான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டதால் அதிலிருந்து தற்போது விடுதலை கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.