ilakkiyainfo

`நடிகராக யோகிபாபுவைப் பிடிக்கும்; திருமணம் என்பது வதந்தி!’ – வைரல் போட்டோ குறித்து நடிகை சபீதா

`நடிகராக யோகிபாபுவைப் பிடிக்கும்; திருமணம் என்பது வதந்தி!’ – வைரல் போட்டோ குறித்து நடிகை சபீதா
November 26
06:36 2019

நடிகர் யோகி பாபுவுடன் தனக்குத் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என நடிகை சபீதா ராயும் விளக்கம் அளித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர், பெண் ஒருவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலானது.

யோகி பாபுவுக்கு அந்தப் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறரீதியில் தகவல்கள் வெளியாகின. அதேநேரம், யோகிபாபுவுடன் அந்த வைரல் போட்டோவில் இருப்பது யார் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த யோகிபாபு, ட்விட்டரில் அது வதந்தியே என்று விளக்கமளித்தார். இதுகுறித்த அவர், “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது.

அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் இருப்பது நடிகை சபீதா ராய் என்பது தெரியவந்தது.

யோகி பாபுவுடன் திருமணம் என்ற தகவல் வதந்தியே என சபீதாவும் விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “கடந்த இரண்டு நாள்களாக என்னுடைய பெயரும், காமெடி நடிகர் யோகி பாபுவின் பெயரும் வைரலாகி வருகிறது.

யோகி பாபு திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் என்று ஒரு செல்ஃபி வைரலாகியது. அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான்தான். இதற்கு சிரிப்பதா, அழுவதா எப்படி ரியாக்ட் பண்றதுன்னே எனக்குத் தெரியல.

இது வதந்தியே, உண்மையில்லை என நடிகர் யோகி பாபு, நேற்றே விளக்கமளித்திருந்தார். இன்னும் நீங்க எதுவும் சொல்லலையே என்று எல்லோரும் கேட்டதனாலதான் இந்த வீடியோ. யோகி பாபு சொன்னதுபோலவே அது வதந்தியே.

 கடந்த 2017ல் கன்னிராசி என்ற படத்தில் யோகிபாபுவுடன் நான் முதன்முதலாக சேர்ந்து நடித்தேன். நல்ல நடிகராக, காமெடி நடிகராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது, அவருடன் சேர்ந்து நான் செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.

அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இப்போது வெளியாகி எப்படி வைரலானதுன்னே தெரியல. அவர் கூட மூன்று படங்கள் நடித்திருக்கிறேன்.

லிசா படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தேன். இப்போது காக்டெயில், ராஜவம்சம் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன். எனவே, தயவுசெய்து இந்தப் போலியான செய்தியை நம்பாதீர்கள். அவருடைய பெயரையும் என்னுடைய பெயரையும் கெடுக்காதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com