ilakkiyainfo

நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ‘தமிழில் பேசலாமா’ என்று கேட்டு பதிலடி

நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ‘தமிழில் பேசலாமா’ என்று கேட்டு பதிலடி
November 25
05:59 2019

தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நேற்றைய (சனிக்கிழமை) அமர்வு ஒன்றில் நடிகை டாப்சி பன்னு கலந்து கொண்டு பலரது கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து கொண்டிருந்தார்.

அப்போது, நடுவில் குறுக்கிட்ட நபரொருவர், டாப்சியிடம் இந்தி மொழியில் பேசும்படி வலியுறுத்தினார். உடனே, பார்வையாளர்களை நோக்கிய டாப்சி, “இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் இல்லை என்று பதிலளித்தனர்.

இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து, ‘நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. எனவே இந்தியில்தான் பேச வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபரின் பேச்சுக்கு முற்று வைக்கும் வகையில், “நான் தமிழ், தெலுங்கு திரைத்துறையிலும் நடித்து வருகிறேன். எனவே, நான் உங்களிடம் தமிழில் உரையாடலாமா?” என்று டாப்சி கேட்டவுடன், அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்க, கேள்வி எழுப்பிய நபர் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை விடுத்து நடிப்புத்திறன் சார்ந்த கேள்விகளை கேட்குமாறும் டாப்சி பார்வையாளர்களிடம் வலியுறுத்தினார்.

_109812531_8fddd70b-2562-4640-8ead-f7fd2253bccc arts-and-culture-50534592

குறிப்பாக, பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்களை பார்ப்பதன் அவசியம் குறித்து அவர் தனது கருத்தை பதிவு செய்ததாக ஐஎஃப்எஃப்ஐ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீங்கள் ஒரு நல்ல ரசிகராக இருக்க விரும்பினால், பெண்ணை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட படத்தை திரையரங்கிற்கு சென்று பாருங்கள். ஏனென்றால், பெண்ணை மையாக கொண்ட ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் அது அதேபோன்ற குறைந்தது ஐந்து திரைப்படங்களை தயாரிப்பதற்கு காரணமாக அமையும்” என்று அந்த ட்விட்டர் பதிவில் டாப்சி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com