எனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அப்படி நடந்தால் முதல் தகவல் தெரிவிப்பது நானாகத்தான் நிச்சயம் தகவல் தெரிவிப்பேன் என்று ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் த்ரிஷா. உள்ளே வெளியே மாதிரி ஆகிவிட்டது த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம்.
முன்னணி நாளிதழ்கள் உள்பட அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை படத்துடன் வெளியிட்டுவிட்டார்கள். ஆனால் செய்தியை உறுதிப்படுத்த வேண்டிய த்ரிஷாவும் அவரது அம்மாவும் முதலில் மவுனமாக இருந்தனர். இன்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
த்ரிஷா அம்மா முதலில் மறுப்பு வெளியிட்டார். இப்போது த்ரிஷா ட்விட்டரில் மறுப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு நிச்சயதார்த்தம் என்று வெளியான செய்திகளில் உண்மையில்லை. அப்படி நடந்தால் அந்த செய்தியைச் சொல்லும் முதல் ஆள் நான்தான்,’ என்று கூறியுள்ளார்.என்னதான் நடக்குது?
இணையத்தில் உலா வரும் த்ரிஷா – வருண் மணியன் நெருக்கமான படம்!
18-11-2014
த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் என நேற்று செய்தி வெளியானபோது, மீடியா உலகுக்கே இது உண்மையா பொய்யா என சந்தேகம். இன்னொரு பக்கம் அவரது தாயார் உமா கிருஷ்ணன் அப்படி எதுவும் நடக்கவில்லையே என சொல்லி வந்தார். இந்த நிலையில் த்ரிஷாவும் வருண் மணியனும் மிக நெருக்கமாக உள்ள ஒரு புகைப்படம் வெளியாகி, இருவருக்குமான உறவை உறுதி செய்தது.
மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட புகைப்படம் அது. இந்த படத்தை வைத்தே த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் குறித்து செய்திகள் வெளியாகின. இந்தப் படம் குறித்து ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை த்ரிஷாவும் அவர் தாயாரும். மாறாக திருமண நிச்சயதார்த்த செய்தியை மறுத்துள்ளனர்
நடிகை திரிஷா-தொழில் அதிபர் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது
17-11-2014
‘லேசா லேசா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், திரிஷா. கில்லி, சாமி, ஆதி, திருப்பாச்சி, ஜீ, கிரீடம், மவுனம் பேசியதே, உனக்கும் எனக்கும் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
தமிழ் பட உலகைப்போல் தெலுங்கு பட உலகிலும் திரிஷா முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் இருந்து வந்ததாகவும், பின்னர் அந்த காதல் முறிந்து போனதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில், திரிஷாவுக்கு திடீர் என்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமகன் பெயர், வருண் மணியன். சென்னையை சேர்ந்த தொழில் அதிபர். இவர், வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். காவியத்தலைவன் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
திரிஷா-வருண் மணியன் நிச்சயதார்த்தம், சென்னை செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீட்டில் நடந்தது. அப்போது மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். திரிஷா- வருண் மணியன் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.
Post Views: 111